என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம்

என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம்

கதை இயக்கம் – பிரபு ஜெயராம்

நடிகர்கள் – R.S கார்த்திக், ரோகினி மொலேட்டி, பகவதி பெருமாள், ஜூனியர் பாலையா, நக்கலைட்ஸ் தனம், ராகுல் தாத்தா மற்றும் மெட்ராஸ் கோபா,

 

கதை – ஒரு உதவி இயக்குநர் சாதி அடுக்குகளை வைத்து இரண்டு கதைகளை எழுதி வைத்துள்ளார் முழுக்க முழுக்க நகைச்சுவையாக ஒன்றும், தீவிரமான கதை சொல்லலில் ஒன்றும் என தயாரிப்பு தரப்பு அதை முடிவு செய்கிறது எனபது தான் கதை.

ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள். எதையும் சட்டை செய்யாத போக்கிரி இளைஞனின் காதல் வாழ்க்கை தான் முதல் பாதி அடுத்த பாதி முற்றிலும் தீவிரமான வேறு கதை என இரண்டு படமாக நகர்கிறது படம் மிக சிக்கலான திரைக்கதை ஆனால் நமக்கு போரடிக்காமல், சுவாரச்யத்துடன் தந்துள்ளார்கள். ஆனால் இரண்டாம் பகுதி பார்த்த பிறகு ஏன் இந்த தேவையில்லாத முதல் பகுதி என்பதை கேட்காமல் இருக்க முடியவில்லை.

முதல் பகுதி முழுக்க இளைஞர்களின் சேட்டையும் அவர் காதல் காமெடி வாழக்கையும் என பரபரப்பாக நகர்கிறது அனைவரையும் மறக்கடித்து அதில் நடிப்பில் ஜொலிக்கிறார் நடிகர் R.S கார்த்திக். அவர் திரைக்கதை எழுதுவதாக பாவனை செய்யும் இடமும் விவசாயத்தை தமிழ் சினிமா படுத்தும் பாட்டை பற்றி அடிக்கும் கமெண்ட்டும் சரவெடி. சில இடங்களில் அத்துமீறும் இரட்டை அர்த்த காமெடி முகச்சுழிப்பு.

ஒவ்வொரு சம்பவமாக விரியும் திரைக்கதை, அதில் நாம் நினைக்காத டிவிஸ்ட் என்பது பார்க்க நன்றாக இருக்கிறது. நாயகனின் தோழர்களாக வருபவர்கள் பலரும் புதுமுகம் என்றாலும், நன்றாக நடித்துள்ளார்கள். முன் பாதி வெறும் கலகலப்பு மட்டுமே அதை சரியாக செய்துமிருக்கிறார்கள்.

 

இரண்டாம் பாதி தான் படம் ஆனால் முற்றிலும் முதல் பாதிக்கு சம்பந்தமில்லாத புதுப்படமாக இருக்கிறது. அரசு வேலைக்கு அரசு அலுவலகத்தில் நடக்கும் தேர்வும், கோவிலில் புதிய அர்ச்சகராக நடக்கும் தேர்வும் தான் கதை இரண்டிலும் சாதி அடுக்குகளால் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மனிதர்கள் வாழ்வையும், சமூகத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.

சாதி பற்ரி சினிமாவில் பேசுவது கத்தி மேல் நடப்பது போன்று, கரணம் தப்பினால் மரணம் ஆனால் ரிசர்வேசன் கஷ்டப்படும் ஏழைக்கு கிடைக்க வேண்டும் ஏற்கனவே வாய்ப்பு கிடைத்து முன்னேறியவனுக்கு மீண்டும் கிடைப்பதில் என்ன பலன் என்பது தான் படம் எழுப்பும் கேள்வி. நியாயமான கேள்வி தான் சிந்திக்க வேண்டிய விசயம். ஆனால் அடிப்படையில் நிகழ வேண்டிய மாற்றம் குறித்தும் பேச வேண்டும் அல்லவா. படம் பல பக்கங்கள் பேசுவதால் இது தான் முடிவு என்று எதையும் முன் வைக்கவில்லை. சில விசயங்களில் எதை சொல்வது எதை விடுவது என்கிற தடுமாற்றம் தெரிகிறது. சில கருத்துக்கள் இந்துத்துவா சார்ந்த கருத்துக்களாக புரிந்து கொள்ளப்படும் அபாயமும் இருப்பதாக் படம் கண்டிப்பாக சில பிரச்சனைகளை கிளப்பலாம். ஆனால் துணிந்து பேசிய இந்த முயற்சிக்கு கண்டிப்பாக வாழ்த்துக்கள்

படத்தில் ரோகிணி ஜூனியர் பாலையா இருவரும் நன்றாக செய்துள்ளார்கள். பலரும் புதுமுகம் முன் பாதியில் வரும் நடிகர்களே பின் பாதியில் வேறு பாத்திரங்களில் வருகிறார்கள் ஆனால் அருமையாக நடித்துள்ளார்கள். இசை பாடல்களில் அதிகம் ஈர்க்கவில்லை ஆனால் பின்னணி இசையில் சரியான பணியை செய்துள்ளது. ஒளிப்பதிவு கச்சிதம்

அழுத்தமான ஒரு புதிய முயற்சி என்னங்க சார் உங்க சட்டம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.