‘பரியேறும் பெருமாள்’ படத்தை போன்றே தீண்டாமைக் கொடுமைகள் பற்றிய இப்படம் ‘மனுசங்கடா’ !

0
143

பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா’. இத்திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநரான அம்ஷன் குமார் எழுதி, இயக்கியிருக்கிறார். ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை, ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோவாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு  திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இதுதான். இதேபோல் புகழ் பெற்ற  கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்ட பெருமையைப் பெற்றுள்ளது. 

‘பரியேறும் பெருமாள்’ படத்தை போன்றே  பல பரபரப்பான உண்மைச் சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வரும், அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

தயாரிப்பு – தாரா, கண.நட்குணன், ஒளிப்பதிவு – பி.எஸ்.தரன், இசை – அரவிந்த், சங்கர். பாடல்கள் – இன்குலாப். படத் தொகுப்பு – தனசேகர், எழுத்து, இயக்கம் – அம்ஷன் குமார்.