தண்ணீர் சர்ச்சையை முகத்தில் அடித்து சொல்ல வந்திருக்கும் படம் கேணி – விமர்சனம்!

கேணி

இயக்கம் – எம். நிஸாத்

பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, ரோகிணி, நாசர்.

தண்ணீர் அடுத்த உலகப்போரை உருவாக்கும் என உலகம் சொல்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய உலகில் தண்ணீர் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.  குறிப்பாக இயற்கை கொடுக்கும் நீரை பங்கீடு செய்வதில் உலகமெங்கும் உள்ளது போல் நம் நாட்டின் பல மாநிலங்களிலும் சர்ச்சை நிலவுகிறது. அதை கொஞ்சம் முகத்தில் அடித்து சொல்ல வந்திருக்கும் படம் தான் கேணி. கேரள தமிழக எல்லையில் அமைந்திருக்கிறது ஒரு கேணி வற்றாத ஊற்றை கொண்டிருக்கும் கிணற்றால் கேரளா தழைக்கிறது. தமிழகப்பகுதி வறட்சியில் திளைக்கிறது. ஆனால்  தனக்கு சொந்தமான கிணற்றை கேரள மக்கள் மட்டுமின்றி தமிழர்கள்  எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று போரடுகிறார். ஜெயப்பிரதா அவருடன் இணைகிறார் பார்த்திபன். இந்தப்போராட்டம் தான் படம்.

தண்ணீர் பிரச்சனையையும் கேரள தமிழக பிரச்சனையையும் தைரியமாக சொல்லியதற்கே இயக்குநருக்கு பூங்கொத்து . பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, நாசர் என நடிப்பு ராட்ச்சர்கள் படம் முழுதும் நிறந்திருக்கிறார்கள். அவரவர் பாத்திரங்களை அற்புதமாய் செய்திருக்கிறார்கள். மூன்று பத்திரிக்கையாளர்களின் பார்வையில் படம் நான்லீனியராக செல்கிறது. புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. தண்ணீர் பிரச்சனை மட்டும் இல்லாமல் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் தீவிரவாதிகளாக அரசால் அடைக்கப்படும் ஒடுக்குமுறையையும், எளியவர்களின் மீது அரசு காட்டும் அடக்குமுறையையும் சொல்கிறது இந்தக்கேணி.

ஆனால் படம் முழுதும் பிரச்சனைகள் மட்டுமே பேசப்பட்டு கொண்டிருப்பது கொஞ்சம் போர் என்றாலும் இக்காலத்திற்கு இது அவசியமான படம். நௌஷாத்தின் கேமரா படத்தை பிரமாண்டமாக்கியுள்ளது. இசை படத்திற்கு அழகை கூட்டுகிறது. இந்த்க்கேணி தண்ணீரின் அவசியம். மலயாள டயலாக்குகள் அனைத்தும் அப்படியே சாதாரண ரசிகனையும் கொஞ்சம் கருத்தில் கொண்டிருக்கலாம். படத்தில் சமூக பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதால் கதையின் நேர்த்தன்மை குலைகிறது.

இருந்தும் நமக்கு அவசியமானதை  சொல்ல வந்ததற்கு பாராட்டலாம் இந்தக்கேணியை.

 

 கதிரவன்