மகளுடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம் !

0
194
trailer of Vijay Sethupathi's web film Mughizh
நடிகர் விஜய் சேதுபதி  திரைப்படங்கள் பற்றிய செய்திகள் இப்போது அடிக்கடி வந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் மூன்று திரைப்படங்கள் வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு, தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களை கையில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. திரைப்படம் வெப்சீரிஸ் தொடங்கி, டிவி ஷோ, விளம்பரம் என விஜய் சேதுபதியை பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் தினமும் அதிகரித்துவருகின்றனர். இப்போது, விஜய் சேதுபதி தன் மகளுடன் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் படபிடிப்பும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ” முகிழ்” என பெயரிடபட்ட திரைப்படம் , விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி, நடிகராக அறிமுகமாகும் திரைப்படம். அண்மையில் படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களால் பாராட்டபட்டது.
இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, ஸ்ரீஜா விஜய் சேதுபதி உடன் ரெஜினா காசன்ட்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். முழு நீளபடத்தை விட குறைவான நேரம் உடைய படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தினை எழுதி இயக்குவது, அறிமுக இயக்குனர் கார்த்திக் ஸ்வாமிநாதன். படத்தினை தயாரிப்பது விஜய் சேதுபதி.