உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது.
இந்த Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம்தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார்.
இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது.
உலகளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு பேசிய போது, “
ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம் போனது இப்பத்தான் உதவியிருக்கு. அர்னால்ட் பட டிரெய்லர் லான்ஞ் பண்ண என்ன கூப்பிட்டிருக்காங்க. ஜிம் போற எல்லாருக்கும் அர்னால்ட் பத்தி தெரிஞ்சிருக்கும். அவரோட டெர்மினேட்டர் உலகம் முழுக்க ஃபேமஸ். அவரோட டிரெயலர் நான் வெளியிடறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
ஒவ்வொரு முறை டிரெய்லர் பார்க்கும் போதும் நிறைய டீடெயில் தெரியுது. அந்தளவு பிரம்மாண்டமா உழைச்சிருக்காங்க. நான் அவரோட பயங்கர ஃபேன். True lies, Conan the barbarian, terminator என எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.
ஸ்டாரா இருக்கறதால மட்டும் அவர் ஃபேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட ஃபேமஸ்ஸுக்கு அவரோட பாடி பிஸிக் தான் காரணம். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும். அவரோட பிஸிக் யாருக்கும் இல்லாதது. அவர் ஆக்ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும். திரும்பவும் அவரோட ஆக்ஷன் பாக்கப்போறோங்கிறதே பெரிய மகிழ்ச்சி தான்.
ஒரு விஷயம் தெரியுமா? அவர் 7 முறை ஆணழகன் பட்டம் ஜெயிச்சிருக்கார். 5 வருஷம் கழிச்சிம் கூட ஒரு முறை ஜெயிச்சிருக்கார். ஜிம் போறதால எனக்கு தெரியும் கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு திரும்ப இந்த ஜிம் ஒர்க் அவுட் பண்றது ரொம்ப கஷ்டம். எப்படி அவரால முடிஞ்சதுனு கேட்கனும். உலகம் முழுக்க அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்னே நிறைய இருக்கு இத சாதிக்கறது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.
நவம்பர் 1 படம் வருது இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு எல்லோரும் பாருங்க என்சாய் பண்ணுங்க”என்றார்