Venom: Let There Be Carnage part 2 விமர்சனம் !

Venom: Let There Be Carnage part 2

இயக்கம் – ஆண்டி செர்கீஸ்

நடிகர் – டாம் ஹார்டி ம், வூடி ஹாரெல்சன், மிச்செலெ வில்லியம்ஸ்

கதை : வெனோம் தன்னுள்ளேயே வாழ ஆரம்பிக்க அதன் உதவியில் துப்பறிந்து கதைகளை கட்டுரைகளாக எழுதி புகழ் பெற ஆரம்பிக்கிறான் எட்டி ப்ரோக். ஒரு சைக்கோ கொலையாளி எதேச்சையாக இவனது ரத்தத்தை ருசித்து விட, அவன் மான்ஸ்டராக ஆகிவிடுகிறான். இப்போது வெனோமுக்கும் மான்ஸ்டருக்கும் சண்டையில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.

வெனோம் மார்வல் காமிக்ஸ் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கே புரிந்த சூப்பர் ஹீரோ சினிமா. மற்றவர்களுக்கு இது குரளி வித்தை தான். காமிக்ஸில் இது ஸ்பைடர்மேன் உலகத்தில் தான் வரும் ஆனால் படத்தில் இதுவரை வெனோமை அவஞ்சர் உலகத்தில் அனுமதிக்கவில்லை.

வெனோம் முதல் பாகத்தில் வெறும் கதாப்பாத்திரங்களின் அறிமுகம் மட்டுமே நிகழ்ந்தது. இந்தப்பகுதியில் கொஞ்சம் கதை சொல்ல முயன்றிருக்கிறார்கள் ஆனால் அது சரியாக நிகழந்ததா என்பது தான் கேள்விக்குறி. மார்வல் காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும்படியும் ரசிக்கும்படியும் படம் இருப்பது தான் சோகம்.

எல்லாப்பாத்திரங்களையும் எளிதில் செய்துவிடும் டாம் ஹார்டிக்கு இந்தப்படம் ஜுஜுபி. வெனோமுடன் சண்டை போடுவது தனியாக காதலிக்கு ஏங்குவது, தன் ரகசியம் தெரிந்து விடாமல் இருக்க போராடுவது என படம் முழுதும் அவர் மட்டுமே இருக்கிறார். காதலி மிச்சலெ வில்லியம்ஸ் குறைந்த காட்சிகளே வந்தாலும் கவர்கிறார். வில்லனாக வரும் வூடி வழக்கமான ஹாலிவுட் பாணி வில்லன்களை பிரதிபலித்துள்ளார்.

படத்தில் கேமரா, எடிட்டிங், சிஜி அத்தனையும் கச்சிதமாக இருக்கிறது ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை மட்டும் மிஸ்ஸிங். மானஸ்டர்கள் சண்டையிடும் காட்சிகள் குழந்தைகள் மேஜிக் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. மார்வெல் காமிக்ஸ் தெரியாதவர்களுக்கு படம் சுத்தமாக புரியாமல் இருப்பது சோகம். இறுதி காட்சியில் வரும் ஸ்பைடர் மேன் மட்டுமே ஆறுதல்.

வெனோம் மார்வல் ரசிகர்களுக்கு மட்டும்.