பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாரான ” எதற்கும் துணிந்தவன் “

0
171

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன் ” .

சன் பிக்சர்ஸ் உடைய தயாரிப்பில் , இயக்குநர் பாண்டியராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். கடைக்குட்டி சிங்கம், எங்க வீட்டு பிள்ளை என இரண்டு பிரமாண்ட வெற்றிகளுக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படம் என்பதாலும், நடிகர்  சூர்யா- இயக்குநர் பாண்டிராஜ் இணையும் படம் என்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக  முடிந்துள்ளது.  படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

பிரமாண்டமாக உருவாக்கும் இத்திரைப்படம் குடும்ப உறவுகளை அடிப்படையாக கொண்டு கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம் எஸ் பாஸ்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். டி. இமான் இசையமைக்கிறார், R. ரத்னவேலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை ரூபன் செய்துள்ளார்.

 

படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தை கிறிஷ்துமஸ் பண்டிகைக்கு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.