தனுஷ் ஜோடி ஆகிறார் மலர் டீச்ச்சர் ‘ சாய் பல்லவி’

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மாரி 2’ படத்தில், தமிழ், மலையாளம் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலர் டீச்சர் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சாய் பல்லவி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இதில் இடம்பெற்ற மலர் டீச்சர் கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

மலர் டீச்சர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சாய்பல்லவிதான். அந்தளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். இவர் இப்படத்தில் நடிப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.’மாரி -2′ அக்டோபரில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் வில்லனாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.