30
Sep
தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மாரி 2’ படத்தில், தமிழ், மலையாளம் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலர் டீச்சர் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி'. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சாய் பல்லவி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இதில் இடம்பெற்ற மலர் டீச்சர் கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மலர் டீச்சர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சாய்பல்லவிதான். அந்தளவிற்கு ரசிகர்கள்…