25
Nov
வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேரக் கவர்ந்து, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிரடி அலைகளை உருவாக்கி, ஒரு சகாப்தமாக மாறியிருக்கிறது அமரன். காதல், தியாகம், தேசப்பற்று ஆகிய உன்னதமான விஷயங்களின் சரிவிகிதக் கலவையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர சரிதத்தை ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சொல்கிறது அமரன். பார்வையாளர்களின் உணர்வோடு ஒன்றிவிடும் தன்மையும் அற்புதமான நடிப்பும் சேர்ந்து இந்த ஆண்டின் பெருவெற்றிப் படங்களுள் ஒன்றாக அமரன் திரைப்படத்தை உயர்த்தியிருக்கின்றன. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு சகல தரப்பினரிடமும் பாராட்டுப் பெற்று, திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. அன்பான மகன், நேசமிக்க கணவன், பாசக்காரத் தகப்பன் ஆகிய முகங்களோடு, போர்க்களத்தில் தளபதியாகவும் திகழ்ந்த ஒரு போர்வீரனான முகுந்த் கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பால் பெரும் நம்பகத்தன்மையை உருவாக்கியதோடு முகுந்த்…