டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

சக பத்திரிகை நண்பர்  ஒருவர் குறிப்பிட்டது போல், ‘எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள்; இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள். விறுவிறுப்பான நடை, நினைத்ததைத் தயக்கமின்றிப் பேசும் தன்மை, அதில் வெளிப்படும் உறுதியான தொனி… இடையிடையே கொஞ்சம் சிரி¢ப்பு… இவைதாம் 82 வயதாகும் கே.ஆர். ராமசாமி என்ற ‘டிராபிக்’ ராமசாமியின் அடையா ளங்கள். பிறப்பால் பிராமணர், செயல்பாடுகளில் போர்க் குணமிக்க க்ஷத்திரியன் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் சந்திக்கின்ற தெரு பிரச்சினைகள் தொடங்கி சிக்கலான அரசியல் பிரச்சினைகள்வரை 500க்கும் மேற்பட்ட பொது வழக்குகள் தொடுத்தவர்’

இந்த ‘டிராபிக்’ ராமசாமிக்கு தமிழகம் முழுக்க மட்டுமின்றி வெளிநாடுகளிலும்கூட ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. காரணம் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒன்றையடுத்து ஒன்று எனத் தொடுக்கும் பொதுநல வழக்குகள் அவருக்கு ஊடக ஆதரவைத் தேடிக்கொடுத்தன. அவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் அநேகமாக அனைத்து தமிழ் ஊடகங்களில் மட்டு மின்றி பெரும்பாலான தேசிய ஊடகங்களிலும் வந்துகொண்டே உள்ளன. இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு படத்தை இயக்கவுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்றும் இப்படத்தில் இளவயது ராமசாமியாக விஜய் நடிக்கக் கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பலமுகங்களை கொண்டவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘டூரிங்டாக்கீஸ்’ என்ற படத்தை இயக்கியவர் எஸ்.ஏ.சி. அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்கவில்லை. ஆனால், ‘நையப்புடை’ மற்றும் ‘கொடி’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், மறுபடியும் படம் இயக்குவதற்குத் தயாராகிவிட்டார் எஸ்.ஏ.சி. இந்தமுறை அவர் கையில் எடுத்திருப்பது, சமூகப் பிரச்னைகளுக்காக போராடி வரும் டிராபிக் ராமசாமி வாழ்க்கையை. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி உள்ளன. விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

பல படங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பளித்து திறமையானவர்களை அடையாளம் காட்டிய எஸ்.ஏ.சி., இந்தப் படத்திலும் அதையே கடைப்பிடிப்பார் என்கிறார்கள். அத்துடன்இப்படத்தில் இளம்வயது ராமசாமியாக சில காட்சிகளில் விஜய் நடிப்பார் என்றும், வயதான ராமசாமியாக எஸ்.ஏ.சி நடிப்பார் என்றும்  அச்சச்சோ.. எஸ். ஏ. சிக்கு அப்படி இரு திட்டம் இருந்தாலும் தளபதிக்கு அப்படி எல்லாம் எந்த ஐடியாவும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனாலும் எஸ் ஏ சி இப்படம் குறித்து டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்து ஆலோசித்துவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.