டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

நாளைய முதல்வராக ஆசைப்படும் நடிகரின் அப்பா & டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் 82ஆவது பிறந்தநாள் இன்று 💐 ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஏபி நாகரஜன்,பீம்சிங் காலம் தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் வந்த டைரக்டர்கள் வரை எத்தனை எத்தனையோ விதங்களில் படமெடுத்திருக்கிறார்கள். குடும்பத்தை மையமாக வைத்தும், மிருகங்களை மையமாக வைத்தும், சஸ்பென்ஸ் திரில்லர் என்று மாடர்ன் தியேட்டர்ஸும் என படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இப்போது இந்தியாவில் ஹாட் டாபிக் ஆகி இருக்கும் சட்டப் பிரச்சினைகளை அலசி, கூறுப் போட்டு நுணுக்கி நுணுக்கி, சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டிய படங்களாக எடுத்து வாயை பிளக்க வைத்தவர் என்கிற தன் பாணியை, தனி பாணியாக்கி அதில் வெற்றியும் பெற்றவர்... எஸ்.ஏ.சந்திரசேகர். கோலிவுட் திரையுலகில், ‘இந்த டைரக்டர் படம்பா... பாத்தே ஆகணும்’ என்று ஒரு சில இயக்குநர்களின் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். எத்தனையோ இயக்குநர்களின் படங்களை, ஹீரோயிஸத்தையும் கடந்து, பார்த்து ரசித்தது போல், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களையும் அப்படித்தான்…
Read More
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

சக பத்திரிகை நண்பர்  ஒருவர் குறிப்பிட்டது போல், ‘எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள்; இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள். விறுவிறுப்பான நடை, நினைத்ததைத் தயக்கமின்றிப் பேசும் தன்மை, அதில் வெளிப்படும் உறுதியான தொனி... இடையிடையே கொஞ்சம் சிரி¢ப்பு... இவைதாம் 82 வயதாகும் கே.ஆர். ராமசாமி என்ற ‘டிராபிக்’ ராமசாமியின் அடையா ளங்கள். பிறப்பால் பிராமணர், செயல்பாடுகளில் போர்க் குணமிக்க க்ஷத்திரியன் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் சந்திக்கின்ற தெரு பிரச்சினைகள் தொடங்கி சிக்கலான அரசியல் பிரச்சினைகள்வரை 500க்கும் மேற்பட்ட பொது வழக்குகள் தொடுத்தவர்’ இந்த ‘டிராபிக்’ ராமசாமிக்கு தமிழகம் முழுக்க மட்டுமின்றி வெளிநாடுகளிலும்கூட ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. காரணம் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒன்றையடுத்து ஒன்று எனத் தொடுக்கும் பொதுநல வழக்குகள் அவருக்கு ஊடக ஆதரவைத் தேடிக்கொடுத்தன. அவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் அநேகமாக அனைத்து தமிழ்…
Read More