02
Jul
நாளைய முதல்வராக ஆசைப்படும் நடிகரின் அப்பா & டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் 82ஆவது பிறந்தநாள் இன்று 💐 ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஏபி நாகரஜன்,பீம்சிங் காலம் தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் வந்த டைரக்டர்கள் வரை எத்தனை எத்தனையோ விதங்களில் படமெடுத்திருக்கிறார்கள். குடும்பத்தை மையமாக வைத்தும், மிருகங்களை மையமாக வைத்தும், சஸ்பென்ஸ் திரில்லர் என்று மாடர்ன் தியேட்டர்ஸும் என படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இப்போது இந்தியாவில் ஹாட் டாபிக் ஆகி இருக்கும் சட்டப் பிரச்சினைகளை அலசி, கூறுப் போட்டு நுணுக்கி நுணுக்கி, சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டிய படங்களாக எடுத்து வாயை பிளக்க வைத்தவர் என்கிற தன் பாணியை, தனி பாணியாக்கி அதில் வெற்றியும் பெற்றவர்... எஸ்.ஏ.சந்திரசேகர். கோலிவுட் திரையுலகில், ‘இந்த டைரக்டர் படம்பா... பாத்தே ஆகணும்’ என்று ஒரு சில இயக்குநர்களின் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். எத்தனையோ இயக்குநர்களின் படங்களை, ஹீரோயிஸத்தையும் கடந்து, பார்த்து ரசித்தது போல், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களையும் அப்படித்தான்…
