சக்க போடு போடு ராஜா – டிரைலர்!

0
406
இந்தப் படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் ஜி. எல். சேதுராமன் இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா என்பவர் நடித்துள்ளார். முதல் முறையாக நகைச்சுவை நடிகர் விவேக், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் விடிவி கணேஷ், சம்பத் ராஜ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.  படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளாரக அறிமுகமாகிறார். இதையடுத்து படத்தின் இசை வெளியீடும் வரும் நவம்பர் 14-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.இதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். காமெடி நடிகராக கோலிவுட்டில் அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்த வகையில், ‘சக்க போடு போடு ராஜா’ டிரெய்லரில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.