எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு சூரி , சிவகார்த்திகேயன் மற்றும் திமுக எம்எல்ஏ ஆகியோர் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர் தமிழ் திரை உலகில் பிரபலமான துணை நடிகராக வலம் வருபவர் தான் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். முரட்டு மீசையுடன் கிராமத்து தோற்றத்தில் காணப்படக்கூடிய இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாட்டசாட்டமான உடலுடன் முரட்டு மீசையுடன் இருக்கும் இவர் முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ந்து போயுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…
Read More
விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. ஆனால் ஈழ தமிழர்களின் வீழ்ச்சியில் மகிழ்ச்சியைக் கண்ட முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, தனது பயோபிக்கிற்கு வரும் எதிர்ப்புகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முத்தையா முரளிதரன். அதையும் தாண்டி எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் (அக்டோபர் 19) முத்தையா முரளிதரன் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு…
Read More
விஜய் சேதுபதி – கோகுல் நடத்தும் காந்தி ஜெயந்தி மேஜிக்!

விஜய் சேதுபதி – கோகுல் நடத்தும் காந்தி ஜெயந்தி மேஜிக்!

சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல்  இயக்கத்தில், இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’  ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்  கை கோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்துபேசப்பட்டு வருகிறது.  இப்போது இதே போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல்படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2)பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. ‘வனமகன்’ படத்தின் மூலம்ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகஅறிமுகமான சாயிஷா சாய்கல்‘ஜுங்கா’ படத்தின் நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜாலிபாடல்களையும், மெலடிமெட்டுக்களையும் ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்காகஉருவாக்கித் தந்த சித்தார்த் விபின்இப்படத்திற்கும்இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.  இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ளபடங்களிலேயேமிகப்பிரம்மாண்டமான படமாகஉருவாகவுள்ளது ‘ஜுங்கா’திரைப்படம். இப்படத்தைவிஜய்சேதுபதியே தன்னுடையசொந்த பேனரில் தயாரிப்பதால்,படம் மீதான ரசிகர்களின்எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்புதுவங்குவதற்கு முன்பே இப்படம்சம்பந்தப்பட்ட வியாபாரம்முடிந்துவிட்டது. படத்தின் பூஜைசமயத்திலேயே அப்படத்தின்வியாபாரங்கள் தொடங்குவதுஇதற்கு முன்பு சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமேநிகழ்ந்துள்ள அதிசயம்…
Read More
விஜய் சேதுபதி மார்கெட் வேல்யூ என்னான்னு தெரியுமா?

விஜய் சேதுபதி மார்கெட் வேல்யூ என்னான்னு தெரியுமா?

விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட்  வேல்யூ   அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ’ என்ற வெற்றிப்படத்தில்…
Read More
ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள்! – விஜய் சேதுபதி அப்செட்!

ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள்! – விஜய் சேதுபதி அப்செட்!

ஸ்ரீசாய்ராம் கிரியே ‌ஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் வழங்கும் படம் ‘கருப்பன்’. இதில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, தான்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை-டி.இமான், ஒளிப்பதிவு-சக்திவேல், எடிட்டிங்- டி.வி.விஜயன், ஸ்டண்ட்-மாஸ்டர் ராஜசேகர், தயாரிப்பு- எஸ்.ஐஸ்வர்யா, இயக்கம்-பன்னீர்செல்வம்.இந்த படம் மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதில் விஜய்சேதுபதி மதுரை பகுதி இளைஞனாக நடித்திருக்கிறார். மாடு பிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் 29ம் தேதி ரிலீஸாகப் போகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் தான்யா கூறும்போது, “மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மதுரை பெண்ணாகவே மாறி நடித்திருக்கிறேன். எனது நடிப்பை வெளிப்படுத்த இந்த படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது” என்று தெரிவித்தார். ஏ.எம்.ரத்னம், “இது பன்னீர்செல்வம் இயக்கத்தில் சிறந்த படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்று கூறினார். விஜய் சேதுபதி பேசிய போது, “மனித வாழ்க்கையின் அழகும் ஆரம்பமும்…
Read More
விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கப் போகும் ஜுங்கா பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கப் போகும் ஜுங்கா பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது உறுதியாகி முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது. தற்போது 'ஜுங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை சுமார் ரூ.20 கோடி பொருட்செலவில் தானே தயாரித்து, நடிக்க முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி. 'ஜுங்கா' குறித்து இயக்குநர் கோகுல் கூறிய போது, “'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், சந்தித்து கதையைக் கூறினேன். முழுக்கதையையும் கேட்டுவிட்டு, சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு இதனை நானே தயாரிக்கிறேன் என்றார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியைத் தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் அதிக பொருட்செலவில் தயாராகும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக்…
Read More
புரியாத புதிர் 294 திரையரங்குகளில் வெளியாகி இருக்குது!

புரியாத புதிர் 294 திரையரங்குகளில் வெளியாகி இருக்குது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'புரியாத புதிர்'. ரெபெல் ஸ்டுடியோ உடன் இணைந்து ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் ஜே சதீஷ்குமார் படத்தை தயாரித்திருக்கிறார். பல தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர் படக்குழுவினர்.  இயக்குனர் ராம் சாரிடம் உதவியாளராக பணி புரிந்தேன்.  2009ல் வாட்ஸாப் வருவதற்கு முன்பே இந்த கதையை எழுதி விட்டேன். 60 நாட்களில் படத்தை முடித்து விட்டோம். ஆனாலும் பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழிலிலும் தாமதம் என்பது தவிர்க்க முடியாதது. விஜய் சேதுபதி பெரிய ஹீரோவாக ஆவதற்கு முன்பே ஆரம்பித்ததால் அவரின் இப்போதைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி படமாக கொடுக்க முடியவில்லை. இப்போது என்னிடம் இருக்கும் கதை விஜய் சேதுபதியின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற…
Read More
மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

படு கேஷூவலாக பல்வேறு ரோக்லளில் நடிக்க ஆரம்பித்து தர்போது டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்று கடந்த ஆண்டு 6 படங்களை வெளியிட்டு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் மார்ச் மாதம் வெளியான 'கவண்' ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தாதாவாக அவர் நடித்த 'விக்ரம் வேதா' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். மேலும் தற்போது கருப்பன், அநீதி கதைகள், 96, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ஏற்கனவே இவர் நடித்து முடித்துள்ள இடம் பொருள் ஏவல், புரியாத புதிர் ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், இந்த ஆண்டில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,…
Read More