மேரி கிறிஸ்துமஸ் திரையில் ஒரு நாவல் !!

 

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி காத்ரினா கைஃப் நடிச்சிருக்குற இந்தி படம்.
தமிழ் மொழி மாற்றத்தில வெளிவந்திருக்கு.. தமிழுக்காக நிறைய மெனக்கெட்டிருக்காங்க..
பொங்கலுக்கு வெளிவந்திருக்க இந்த படம் விஜய் சேதுபதி ரசிகர்கள் திருப்தி படுத்துமா??

ஸ்ரீராம் ராகவன் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ஆனா பாலிவுட்ல படம் பண்றவரு! உலகம் ஃபுல்லா இவர் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கு.
பொதுவா திரைப்பட விழாக்களில் பங்கு பெறக்கூடிய படங்கள் தான் இவர் அதிகமா பண்ணுவாரு.

இவரோட படங்கள் டார்க் தீமை வச்சு, நியோ நாயர் பாணில தான் தான் இதுவரை வந்திருக்கு, இவரோட கடைசி படமான அந்தாதுன், இந்தியால கிட்டத்தட்ட அஞ்சு ஆறு மொழிகளுக்கு மேல ரீமேக் செய்யப்பட்டது மிகப்பெரிய ஹிட், அதனால இப்ப விஜய் சேதுபதி நடிப்பில் வந்திருக்கு இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு !!

ஸ்ரீராம் ராகவன் எப்போதும் மெயின் ஸ்க்ரீன் ரசிகர்களுக்கு படம் பண்றவர் கிடையாது. அவரோட படங்கள் திரைப்பட ஆர்வலர்கள் உலகம் சினிமா பாக்குற திரை ரசிகர்களுக்கு தான் அதிகம் பிடிக்கும். அவர் கட்டமைக்கிற உலகம், அதுக்குள்ள உலவுற மனிதர்கள், ஒரு க்ரைம், அதை சுற்றி நடக்கிற எமோஷன், இதுதான் அவரோட படங்கள்ல இருக்கிற மையம்.

பொதுவா அவர் படங்களில் மனுசனோட ரெண்டு பக்கமும் இருக்கும், நல்லவன் கெட்டவன் எல்லாம் ஒருத்தன் தான். மனிதன் சூழ்நிலைகளுக்கு ஏத்த மாதிரி தான் ரியாக்ட் பண்ணுவான். அவனுக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் பார்ப்பான். பழிவாங்குற குணம் ஒரு நல்லவனை எப்படி மாத்தும்? வசதியா வாழ்வதற்காக மனுஷன் எந்த எல்லை வரை செல்வான்? இந்த மாதிரி தீம்கள தான் அவரு படங்கள்ல தொடர்ந்து பயன்படுத்திட்டு வர்றாரு. மேரி கிறிஸ்மஸ் படமும் கிட்டத்தட்ட அந்த வகைதான்.

மேரி கிறிஸ்மஸ் 1962 இல் வந்த பிரெஞ்சு நாவலான லீ மாண்டே அப்படிங்கற புக்கை பத்தினது தான் இந்தப் படம் ஆனால் இந்த படத்தோட கதை, பம்பாய் மும்பையா மாறுவதற்கு முன்னாடி நடக்குற மாதிரி, பம்பாய் நகர காலகட்டத்தில் நடக்கிற ஒரு கதையா சொல்லப்பட்டு இருக்கு.

மொழி மாற்றப்படம் மாதிரி, இல்லாம தமிழுக்காக தமிழையும் தமிழ் நடிகர்கள் வைத்து நிறைய காட்சிகள் எடுத்திருக்காங்க.. நீங்க படம் பார்க்கும்போது உங்களுக்கு கண்டிப்பா தமிழ் ஃபீல் தான் வரும்.

அம்மா இறந்ததற்கு அப்புறமா, பல காலமா துபாயில் இருந்த ஒருத்தன், பம்பாய்க்கு திரும்ப வர்றான். அவன் வந்த அன்னைக்கு நைட்டு ஒரு ஹோட்டல் போக, ஹோட்டல்ல கைக்குழந்தையோட ஒரு பொண்ண சந்திக்கிறான். அந்த பொண்ணால அவனுக்கு ஏற்படுகிற பிரச்சனை, ஒரு கொலை கேஸ் வரைக்கும் கொண்டு போய் விடுது. அதில் இருந்து அவன் தப்பிச்சானா? உண்மையில் என்ன நடக்குது இதுதான் படம்.

ஸ்ரீராம் ராகவன் உலகத்தை புரிஞ்சுகிட்டா இந்த படத்தை நீங்க கண்டிப்பா அணு அணுவா ரசிப்பீங்க.. ஏன்னா திரையில் அவர் கட்டமைக்கிற உலகம் அந்த மாதிரியானது. கொஞ்சம் இலக்கிய ரசனை கொண்டதும்னு கூட சொல்லலாம். இந்தப்படத்தலு பழங்கால மும்பையா கொண்டுவந்திருக்காரு.

விஜய் சேதுபதி வழக்கம் போல தன்னோட பாத்திரத்திற்குள் புகுந்து அசத்திருக்காரு. கர்த்தரினா கைஃப்பும் கலக்கியிருக்காங்க. ராதிகா கொஞ்ச நேரமே வந்தாலும் நல்ல ரோல். போலீஸ் விசாரணை பத்தி அவங்க விளக்குற இடம் அருமை.
படம் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு அப்புறந்தான் படத்தோட முதல் டிவிஸ்ட் ஓபன் ஆகுது. ஆனா அங்கிருந்து இறுதிவரைக்குமே பரபரப்பா கொண்டு போய் இருக்காங்க. ஒரு திரில்லர் பட அனுபவத்தை முழுமையா தந்திருக்காங்க. கிட்டத்தட்ட 80களில் படிக்கிற ஒரு நாவலுக்குள் நுழைஞ்ச மாதிரியான ஒரு பீல் இந்த படம் கொடுக்குது.

படத்தோட பெரிய பிளஸ் ஒளிப்பதிவு, அப்புறம் கலை இயக்கம். வீட்டோட செட்டு, பேக்கரியோட செட்டு, போலீஸ் ஸ்டேஷன் இப்படி படத்துல வர்ற ஒவ்வொரு இடங்களுமே.. அத்தனை ரசனையோடு அமைச்சிருக்காங்க. படத்தோட மியூசிக் ஒரு பழைய காலகட்டத்துக்கு கொண்டு போகுது.

கிளைமாக்ஸ் நமக்கு தெரிஞ்சே இருந்தாலும், ஒரு சர்ப்ரைஸ் தான். ஸ்ரீராம் ராகவன் வழக்கம்போல தன்னோட ரசிகர்கள முழுமையா திருப்பி படித்திருக்காரு. அவரோட படங்கள் பிடிக்கும்னா கண்டிப்பா இதை மிஸ் பண்ணாதீங்க.

திரையில் ஒரு அழகான நாவல் தான் இந்த படம்.