கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு !

கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு !

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க ,ஒளிப்பதிவினை N S உதயகுமார் மேற்கொள்கிறார் . இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றி கூறியது : கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மீகா கூறியது : இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த…
Read More
காளி – விமர்சனம் = கவர்கிறான்

காளி – விமர்சனம் = கவர்கிறான்

தத்து கொடுக்கப்பட்டு அமெரிக்காவில் வளர்ந்து பெரிய டாக்டராகி விட்ட இளைஞன் தன் ஒரினிஜின அம்மா & அப்பாவைத் தேடி இந்தியா வரும் ஜீரோ , நம் தமிழ்நாட்டில் சந்திக்கும் தன் நிஜ வாழ்க்கை படக் கரு. கொஞ்சம் சுருக்கமாக கதையைச் சொல்வதென்றால் அமெரிக்காவில் தனது சொந்த மல்டி ஸ்பெஷாலட்டி ஹாஸ்பிடலில் பெரிய டாக்டராக, சர்ஜனாக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரி கெட்ட கனவு வருகிறது. அதே நேரம் தன்னை வளர்க்கும் அமெரிக்க பெற்றோர் ., தன் நிஜ பெற்றோர் அல்ல.... எனும் உண்மையையும் தெரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி., தன் சிறு பிராய நிகழ்வுகள் தான்.... தன் கெட்ட , கெட்ட கனவுகளுக்கு காரணம் , எனவும் கருதுகிறார். இதை அடுத்து .,விஜய் ஆண்டனி, இந்தியாவுக்கு கிளம்பி தான் யார்? என்பதுடன் தன் சிறு பிராயத்தையும், பெற்றோரையும் தேடி கிளம்புகிறார். வந்த இடத்தில் அவருக்கு அவரது பெற்றோரும் உற்றார், உறவினர்களும்…
Read More
ஒத்தைப் பாட்டு இவ்வளவு உசரத்தைக் கொடுத்துடுச்சு! – ’காளி’ நாயகி  ஷில்பா மகிழ்ச்சி

ஒத்தைப் பாட்டு இவ்வளவு உசரத்தைக் கொடுத்துடுச்சு! – ’காளி’ நாயகி ஷில்பா மகிழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில் மாசமான இந்த மே மாசம் 18ஆம் தேதி வெளி வர உள்ள "காளி" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்  சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் "காளி" படத்தில் வரும் "அரும்பே" இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத்,  இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார். " காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப…
Read More
நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது! – ” காளி” நாயகன் விஜய் ஆண்டனி பேச்சு!

நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது! – ” காளி” நாயகன் விஜய் ஆண்டனி பேச்சு!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ். ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கும் படம் தான் இந்த காளி, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும் என்றார் ரிச்சர்ட்…
Read More
விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா இன்று  -நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது. 'அண்ணாதுரை' படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான 'www.vijayantony.com ' மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என…
Read More
விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.  இவர்  நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு (Editing) பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி ஆசிரியர், குடிகாரர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் மற்றும்…
Read More
error: Content is protected !!