அடுத்தடுத்து இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி, அவர் நடித்து வரும் “ரோமியோ” திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ரோமியோ” திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ரத்தம்.  இந்த படத்தை தனஞ்செயனின் இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Cinemediastars-Infotainment Guaranteed Spot-Vijay antony Upcoming Film  Ratham will have Three Lead Heroines in important roles

இப்படத்தின் டைட்டில் குறித்து விஜய் ஆண்டனியிடன் பேசும்போது  ‘சினிமாவுல பாசிட்டிவ், நெகட்டிவ் சென்டிமென்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல கதையில கடுமையா உழைச்சா கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இதுதான் என் பாலிசி. ‘ரத்தம்’படத்தின் கதைக்கும் இந்த தலைப்பு சரியா பொருந்தினதால, அதையே வச்சோம். அவ்வளவுதான். அதைத் தாண்டி தலைப்புகளுக்கு மெனக்கெடறதில்லை.’ என்று கூரியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.