13
Dec
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான படம் ‘வேலைக்காரன். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான ‘கருத்தவன்லாம் கலீஜா’ மற்றும் ‘இறைவா’ ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘வா வேலைக்காரா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருந்தாலும் வெளிவந்துள்ள ‘வா வேலைக்காரா’ பாடலுக்கு இந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ராஜாதான் ஹீரோவாக இருக்கிறார். கருத்தவன்லாம் கலீஜா பாடல், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமை பேசியது. அதேபோல் வா வேலைக்காரா பாடலிலும் உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமை பேசப்பட்டுள்ளது. கலை இயக்கம் என்பது பாடல் காட்சிகளுக்காக பிரமாண்ட கண்ணாடி அரங்குகள் அமைப்பதும், ரயில்களிலிருந்து சாலை வரை பெயின்ட் அடிப்பதும் மட்டுமே என்று நம்பப்பட்டு வந்ததை வேலைக்காரன் படக்குழு மாற்றியிருந்ததை அரங்கு ஸ்லம் செட் உருவாக்க வீடியோவில் பார்க்க முடிந்தது. அதேபோல் இந்தப் பாடலிலும் படத்தின்…