தல பட்டம் இனி தேவையில்லை – நடிகர் அஜித்

தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் த்ன்னை இனி யரும் தல என அழைக்க கூடாது என அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அஜித், விஜய் ஆகியோர் தான் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். இதில் நடிகர் விஜயை ரசிகர்கள் தளபதி என அழைத்து வருகின்றனர். அதே போல் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் பல காலமாக தல என்றே அழைத்து வருகின்ற்னர் இந்த நிலையில இனி தன்னைதலஎன்று அழைக்க வேண்டாம் என்று அஜித் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ்சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
அஜித்குமார்.

என்று அந்த டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது