31
Dec
குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான "கேம் சேஞ்சர்" படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த உயரமான கட்-அவுட் சர்வதேச அதிசய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது. இந்த…