“விண்ணில் மாயம் காட்டும் “இந்தியன் 2” !!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதிவெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்,  இந்தியா முழுக்க, இதுவரை  இல்லாத வகையில், படத்தின் விளம்பரபுரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர்வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ளகல்கி 2898 கிபி  படத்துடன்இந்தியன் 2″ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அசத்தியது தற்போது துபாயில் விண்ணில்பறக்கும் வீரர்கள் இந்திய 2 பேனரை விளம்பரப்படுத்தி நூதனமாக விளம்பரம் செய்துள்ளனர்.

அரபு நாட்டில் உள்ள துபாயில் பாம் சுமைரா கடற்கரை மேல் வான்வெளியில் விமானத்திலிருந்து குறித்துசாகசம் செய்யும் வீரர்களைக் (ஸ்கை டைவ்) கொண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான திரைபறக்க விடப்பட்டது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறதுரசிகர்கள் ஆர்வத்தோடு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ்நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தியன் 2 படத்தினை,  மிகப்பெரும்பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.  இப்படம் உலகமெங்கும் ஜூலை மாதம் 12 ஆம் தேதிவெளியிடப்படுகிறது.

நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா.  

இயக்குநர்: ஷங்கர்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

ஒளிப்பதிவு இயக்குனர்: ரவிவர்மன்

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.முத்துராஜ்

எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்

வசனம் : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார்

ஆக்‌ஷன் அன்பறிவ்ரம்ஜான் புல்லட்அன்ல் அரசுபீட்டர் ஹெயின்ஸ்டண்ட் சில்வாதியாகராஜன்

VFX மேற்பார்வையாளர்: வி ஸ்ரீனிவாஸ் மோகன்

நடன இயக்குனர் போஸ்கோசீசர்பாபா பாஸ்கர்  

ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்

மேக்கப்வான்ஸ் ஹார்ட்வெல்பட்டணம் ரஷீத்.ஆர். அப்துல் ரசாக்

ஆடை வடிவமைப்பு :  ராக்கிகவின் மிகுல்அமிர்த ராம்எஸ் பி சதீசன்பல்லவி சிங்வி.சாய்

DI: ரெட்சில்லிஸ்

விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

நிர்வாக தயாரிப்பாளர் : சுந்தர் ராஜ்

GKM. தமிழ் குமரன் – M. செண்பகமூர்த்தி

தயாரிப்பு: சுபாஸ்கரன்