2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்காக 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ் வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி…
Read More
ஷங்கர் + ரஜினி உருவாகி வரும் 2 பாயிண்ட் 0 ஷூட்டிங் ஓவர்!

ஷங்கர் + ரஜினி உருவாகி வரும் 2 பாயிண்ட் 0 ஷூட்டிங் ஓவர்!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்டப் பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே '2.0' படத்தில் மிச்சமிருந்தது. அதனை படமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பணிகள் யாவும் இன்றுடன் முடிக்கப்பட்டது. இதனை நாயகி ஏமிஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட '2.0' உருவான விதம் மற்றும் 3டி பணிகளுக்கான வீடியோ பதிவுகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. மேலும், அக்டோபர் 27-ம் தேதி இசை வெளியீட்டை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் துபாயிக்கு பயணிக்கவுள்ளார்கள். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படமென்பதால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் அதில் முழுமையாக கவனம் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'.…
Read More
இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் டூ!

இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் டூ!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியானப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. வடிவேலு டபுள் ஆக்‌ஷனில் கலக்க, மனோரமா, நாசர், இளவரசு, தேஜ ஶ்ரீ, மோனிக்கா, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி படத்துக்கு இசையமைத்திருந்தனர். மெய்யாலுமே மெஹா ஹிட் அடித்த இந்தப் படம் வடிவேலுவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு வடிவேலு முழு நேர ஹீரோ அவதாரம் எடுத்தார். தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில், இம்சை அரசனுக்கு இன்றளவும் தனி இடம் உண்டு. இந்நிலையில், வடிவேலு நடிக்கவுள்ள 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2' பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக உடல் இளைக்க முடிவு செய்துள்ளார் வடிவேலு. 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்துக்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சிம்புதேவன் இயக்கவுள்ள படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார். லைகா நிறுவனம்…
Read More
‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்:  லைகா  தகவல்

‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்: லைகா தகவல்

2.0' படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் விரைவில் துவங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு. லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Follow Raju Mahalingam @rajumahalingam 2.0 promotion kick starts......#2point0 1:04 PM - 24 Jun 2017 அந்த வீடியோ பதிவில், '2.0' படத்தை விளம்பரப்படுத்த விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான 3டி தொழில்நுட்பத்திலான படம் என்பதால், கிராபிக்ஸ்…
Read More