26
Sep
சீட்ஸ் என்டர்டைன்மண்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாச்சி இயக்கத்தில், நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சட்டம் என் கையில். மது போதையில் கார் ஓட்டி செல்லும் ஒரு இளைஞன், தெரியாமல் ஒரு விபத்தை ஏற்படுத்தி விடுகிறான். அந்த விபத்தில் ஒருவன் மரணம் அடைந்து விட, அவனை தூக்கி டிக்கியில் போட்டுக் கொண்டு செல்லும்போது, போலீஸ் செக்கிங் கில் மாட்டிக் கொள்கிறான். வேறொரு இடத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்க, அதை விசாரிக்கும் போலீஸ், இவன் இடித்து சாகடித்தவனிடம் வருகிறது. இந்த கொலை குற்றங்களை எல்லாம் அவன் மேல் போட்டு, அவனை குற்றவாளியாக்க போலீஸ் திட்டமிடுகிறது. அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதுதான் இந்தப் படம். ஓர் இரவு மலைமுகட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், ஒரு சில பாத்திரங்கள், அங்கு நடக்கும் பரபரப்பு திருப்பங்கள், என ஹாலிவுட் பாணி திரைக்கதையை முதல் படத்தில் முயன்று இருக்கிறார்.…