எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது ! “யோலோ” பட பூஜையில் அமீர்!

எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது ! “யோலோ” பட பூஜையில் அமீர்!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது. வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம்ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக, இப்படம் உருவாகிறது. இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா…
Read More
சமுத்திரக்கனி நடிப்பில்  உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’!!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’!!

காதலர் தினத்தன்று வெளியான 'ராமம் ராகவம்' படத்தின் சிறப்பு காட்சி. ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் இப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் கீழ் பிரபாகர் ஆரிபாகா வழங்குகிறார். தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி , தன்ராஜ், ஹரீஸ் உத்தமன், சுனில் நடிக்கிறார்கள். காதலர் தினத்தையொட்டி, ராமம் ராகவம் படத்தின் முதல் காட்சியை சமூக வலைதளங்கள் வழியாக தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்தினார். மேலும், பிரபல இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பேசுகையில், தன்ராஜ் ஒரு நல்ல கதையை திரைப்படமாக்கியுள்ளார் . அவர் பிஸியான நடிகராக இருந்தும் இயக்குனராக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் இந்தப் படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். என்று வாழ்த்தினார். ராமம் ராகவம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், அமலாபுரம்,…
Read More
கொரோனா தொற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

கொரோனா தொற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

  2020-2021-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவர் Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து,நடித்துள்ள படம் தான் 'முடக்கறுத்தான்'. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் Dr.K.வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   சுரேஷ் காமாட்சி பேசியதாவது, Dr.K.வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்க போவதாக கூறியதை கேட்டு அவரது தன்னம்பிக்கையை பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை…
Read More
Are you ok baby திரை விமர்சனம் !!

Are you ok baby திரை விமர்சனம் !!

  நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில், மங்கி கிரியேடிவ் லேப் தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் ஆர் யூ ஒகே பேபி. சொல்லாததும் உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் கிடைத்த கதைகளில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வருகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பல குப்பை படங்களுக்கு மத்தியில் உண்மையில் இவர் படங்கள் வாழ்வின் உண்மைகளை வலிகளை பேசுகிறது. அந்த வகையில் பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்தின் கதை திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் விங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு  ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக இந்த குழந்தையை, கேரளாவில் வாழும்  குழந்தை இல்லாத பணக்கார  கணவன் -மனைவிக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார்கள் லிவிங் டு கெதர் தம்பதிகள். ஒரு வருடம் கழித்து தத்துக்கொடுத்த தாய் காதலன் விட்டுப்போக நினைக்கை தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போக, பல்வேறு…
Read More
“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் நடிகை ரோகிணி பேசியதாவது… படம் பார்த்தேன்... இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு, இப்போதைய நேரத்திற்கு மிகமிக அவசியமான ஒரு படம். இயற்கை போல் அன்பு செய்வதை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது இந்தப்படம். இதில் உழைத்த அத்தனை பேரையும் மேடையேற்றி வாழ்த்தும் இந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. இப்படி…
Read More
‘விமானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘விமானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விமானம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்... கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். இதயத்திற்கு நெருக்கமான கதாநாயகனும் கூட. இவர் தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் 'விமானம்' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும், உணர்வுபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் நடித்து, பார்வையாளர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளிக்கத் தயாராகி விட்டார். இந்த 'விமானம்' திரைப்படம் எதிர் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என…
Read More
‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்!  சிறந்த நடிகர் வசந்த் ரவி!

‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்! சிறந்த நடிகர் வசந்த் ரவி!

Earth & Air மற்றும் The Idea Factory அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘என் சென்னை யங் சென்னை’ விருதுகளுக்காக 13 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இவை பல்வேறு விருது குழுவினரால் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் ‘என் சென்னை யங் சென்னை’ விருது வழங்கும் விழா நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ட்ரீம் தமிழ்நாடு நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
Read More
காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் நெளிவு வளைவு தெரிந்து தன் பணிக்காலத்தை ஓட்டும் ரைட்டர், பொய் வழக்கில் மாட்டிகொண்ட இளைஞனை காப்பாற்ற முயல்வதே கதை. அதிகார வலைக்குள் சிக்கி தவிக்கும் எளியவர்களின் குரல் என்ற கதையமைப்பின் படி அமைக்கபட்ட திரைக்கதை தான் ரைட்டர். ஆழமான கதையையும், ஆச்சர்யப்படுத்தும் கிளைக்கதைகளையும் புகுத்தி உருவாக்கபட்ட திரைக்கதையாக இருந்தாலும், கதையுடன் ஒத்துப்போறதா என்றால், அது கேள்விகுறி தான். ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யங்களையும், சுவாராஷ்யங்களையும் புகுத்த வேண்டும் என்று மெனகெட்ட இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. ஆனால் எல்லா காட்சிகளும் தனிதனியாக சுவாரஷ்யம் நிறைந்ததாக இருந்தாலும், ஒன்றாக ஒரு முழு படத்திற்கான உணர்வை கடத்தவில்லை. காவல்துறையின் கருப்பு பக்கங்களையும், காவலாளிக்களுக்கே காவல்துறை செய்யும் கொடுமைகளையையும் வெளிகொணர முயற்சித்த இயக்குனர், பாராட்டுதலை பெறக்கூடியவர். சமுத்திரகனி ரைட்டர் கதாபாத்திரத்தில், தன் நடிப்பு திறமையை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் அதில் புழங்கும் போலீஸ் நடைமுறைகளின் வழக்கங்கள் என அனைத்தும் நுண்ணிய விவரங்களோடு பதிவு செய்திருப்பது…
Read More
தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல்,  மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பா .ரஞ்சித் பேசியவை , தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர்…
Read More
OTT தளத்தில் வெளியாகும்  வரும் அடுத்த சமுத்திரகனி படம் !

OTT தளத்தில் வெளியாகும் வரும் அடுத்த சமுத்திரகனி படம் !

ரசிகர்கள் விரும்பும் வகையில் பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி முன்னணி OTT தளமாக ஜீ5 வளர்ந்து வருகிறது. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ என ஒரே நேரத்தில் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் வகையில் தரமான வெற்றிப்படங்களை வழங்கி ஜீ5 ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ - பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது. இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரை சந்தித்தனர். இவ்விழாவில் தயாரிப்பாளர் A.L அழகப்பன் பேசியதாவது… மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார்.…
Read More