Are you ok baby திரை விமர்சனம் !!

 

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில், மங்கி கிரியேடிவ் லேப் தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் ஆர் யூ ஒகே பேபி.

சொல்லாததும் உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் கிடைத்த கதைகளில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வருகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பல குப்பை படங்களுக்கு மத்தியில் உண்மையில் இவர் படங்கள் வாழ்வின் உண்மைகளை வலிகளை பேசுகிறது. அந்த வகையில் பெரிய பாராட்டுக்கள்

இந்தப்படத்தின் கதை

திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் விங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு  ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக இந்த குழந்தையை, கேரளாவில் வாழும்  குழந்தை இல்லாத பணக்கார  கணவன் -மனைவிக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார்கள் லிவிங் டு கெதர் தம்பதிகள்.

ஒரு வருடம் கழித்து தத்துக்கொடுத்த தாய் காதலன் விட்டுப்போக நினைக்கை தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போக, பல்வேறு குடும்ப  பிரச்சனைகளுக்கு தனது “சொல்லாததும் உண்மை”   என்ற தொலைக்காட்சி லைவ் ஷோ மூலமாக நியாயம் வழங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அணுகுகிறார்.

குழந்தையின் தாய் லக்ஷ்மி மிக எமோஷனலாக இந்த குழந்தையின் தாயை வைத்து நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். ஆனால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
மாறாக காவல் துறை குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் உள்ளது என்ற கோணத்தில் தத்து பெற்ற கேரள தம்பதிகள் மீது  வழக்கு பதிவு செய்து, குழந்தையை கைப்பற்றி சென்னையில் உள்ள காப்பாகத்தில் சேர்த்து விடுகிறது.

வழக்குக்குப்பின் குழந்தை யார் கைக்கு செல்கிறது என்பதே படம்.

தான் நடத்திய பங்குபெற ஒரு லைவ் ஷோவையே கதைக்குள் கொண்டு வந்து அதை விவரங்களோடு காட்டியதற்கு ளக்‌ லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பாரட்டுக்கள்

இது போன்ற குடும்ப பிரச்சனைகளை வைத்து நடத்தப்படும் ஷோக்கள் அனைத்தும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மைய்யப்படுத்தியே நடக்கின்றன என்பதை நடு நிலையோடு சொல்லி இருக்கிறார் லக்ஷ்மி. படத்திலும் ஒரு நிஜ லக்ஷ்மி ராமகிருஷ்ணனாகவே வந்துள்ளார்.

சட்டத்தின் நீதி தரமத்தின் நீதி இரண்டும் வேறு, நடைமுறை வேறு இதில் சிக்கிக்கொள்ளும் மனிதர்கள் எப்படி அலைக்கழிக்கபடுகிறார்கள் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை அழகாக சொல்லியுள்து படம்.

லைவ் ஷோ நிகழ்ச்சியின் பின்னணி, கோர்ட் கேஸ் நடக்கும் பின்னணி எல்லாம் தத்ரூபமாக வந்துள்ளது.

குழந்தைக்காக ஏங்கும் வளர்ப்பு தம்பதியாக சமுத்திரக்கனி மற்றும் அபிராமி நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். விட்டுப்போகும் காதலன், வறுமை, குழந்தை மீதான ஏக்கம் என அறிமுக நடிகை முல்லையரசி மனதை கலங்கடிக்கிறார். சின்ன சின்ன கதாப்பாத்திரங்களும் அழகாக செய்துள்ளார்கள். மிஷ்கின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்.

இசையில் மீண்டும் ராஜாவென நிரூபித்துள்ளார்

இன்றைய சமூகத்தின் சிக்கல்களை அழகாக சொல்கிறது ‘ஆர் யூ ஒகே பேபி.’.