‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்!  சிறந்த நடிகர் வசந்த் ரவி!

‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்! சிறந்த நடிகர் வசந்த் ரவி!

Earth & Air மற்றும் The Idea Factory அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘என் சென்னை யங் சென்னை’ விருதுகளுக்காக 13 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இவை பல்வேறு விருது குழுவினரால் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் ‘என் சென்னை யங் சென்னை’ விருது வழங்கும் விழா நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ட்ரீம் தமிழ்நாடு நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
Read More
காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் நெளிவு வளைவு தெரிந்து தன் பணிக்காலத்தை ஓட்டும் ரைட்டர், பொய் வழக்கில் மாட்டிகொண்ட இளைஞனை காப்பாற்ற முயல்வதே கதை. அதிகார வலைக்குள் சிக்கி தவிக்கும் எளியவர்களின் குரல் என்ற கதையமைப்பின் படி அமைக்கபட்ட திரைக்கதை தான் ரைட்டர். ஆழமான கதையையும், ஆச்சர்யப்படுத்தும் கிளைக்கதைகளையும் புகுத்தி உருவாக்கபட்ட திரைக்கதையாக இருந்தாலும், கதையுடன் ஒத்துப்போறதா என்றால், அது கேள்விகுறி தான். ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யங்களையும், சுவாராஷ்யங்களையும் புகுத்த வேண்டும் என்று மெனகெட்ட இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. ஆனால் எல்லா காட்சிகளும் தனிதனியாக சுவாரஷ்யம் நிறைந்ததாக இருந்தாலும், ஒன்றாக ஒரு முழு படத்திற்கான உணர்வை கடத்தவில்லை. காவல்துறையின் கருப்பு பக்கங்களையும், காவலாளிக்களுக்கே காவல்துறை செய்யும் கொடுமைகளையையும் வெளிகொணர முயற்சித்த இயக்குனர், பாராட்டுதலை பெறக்கூடியவர். சமுத்திரகனி ரைட்டர் கதாபாத்திரத்தில், தன் நடிப்பு திறமையை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் அதில் புழங்கும் போலீஸ் நடைமுறைகளின் வழக்கங்கள் என அனைத்தும் நுண்ணிய விவரங்களோடு பதிவு செய்திருப்பது…
Read More
தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல்,  மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பா .ரஞ்சித் பேசியவை , தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர்…
Read More
OTT தளத்தில் வெளியாகும்  வரும் அடுத்த சமுத்திரகனி படம் !

OTT தளத்தில் வெளியாகும் வரும் அடுத்த சமுத்திரகனி படம் !

ரசிகர்கள் விரும்பும் வகையில் பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி முன்னணி OTT தளமாக ஜீ5 வளர்ந்து வருகிறது. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ என ஒரே நேரத்தில் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் வகையில் தரமான வெற்றிப்படங்களை வழங்கி ஜீ5 ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ - பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது. இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரை சந்தித்தனர். இவ்விழாவில் தயாரிப்பாளர் A.L அழகப்பன் பேசியதாவது… மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார்.…
Read More
ஜீ5 OTT தளத்தில் வெளியாகும் ‘சித்திரைச் செவ்வானம் ’  திரைப்படம் !

ஜீ5 OTT தளத்தில் வெளியாகும் ‘சித்திரைச் செவ்வானம் ’ திரைப்படம் !

‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச் செவ்வானம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G . வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர். பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இனணந்து தயாரித்துள்ளனர். இயக்குநர், நடிகர் சமுத்திரகனி கூறியதாவது… "‘சித்திரைச் செவ்வானம்’ ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள்…
Read More
சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்க ஆதரவு கிடைப்பதில்லை: சமுத்திரகனி ஆதங்கம்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்க ஆதரவு கிடைப்பதில்லை: சமுத்திரகனி ஆதங்கம்

சினிமா ஒரு வலிமையான ஆயுதம்: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் எஸ். ஏ .சி என்பதும் சினிமாவின் ஐகான் தான்: அமீர் இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் 'நான் கடவுள் இல்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் 'பருத்திவீரன்' சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ''இந்த இசை வெளியீட்டு விழா திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழா. டிசம்பர் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.…
Read More
அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

  எழுத்து இயக்கம் - இரா சரவணன் நடிப்பு - ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி கதை - பாசாமான அண்ணன், தங்கை. தங்கையின் கல்யாணத்திற்கு பிறகு வீட்டோடு வரும் மாப்பிள்ளை. ஒரு பிரச்சனையில் இரு குடும்பமும் பிரிகிறது. மீண்டும் அந்த இரு குடும்பமும் எப்படி சேர்கிறது என்பதே கதை. கதையை படித்தவுடன் கிழக்கு சீமையிலே ஞாபகம் வந்தால் நீயும் என் தோழனே. தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து போட்ட கதை. ஜோதிகாவின் 50 வது படம், இத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் போது ஒரு திரைக்க்தை எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கான திரைக்கதைக்கு எந்த ஒரு அறிகுறியும் படத்தில் இல்லை. படம் முழுதுமே தேமேவென நகர்கிறது. தொலைக்காட்சி சீரியல்களின் தன்மை படத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. படம் எதைப்பற்றியது என்கிற படம் முடிந்தும் கூட புரியவில்லை. ஒரு பாசமான அண்ணன் தங்கை பிரிகிறார்கள் பின் சேர்கிறார்கள் அவர்கள் உறவின் பலத்தையும், உணர்வையும்…
Read More
அருண் விஜய் – ஹரி கூட்டணியில்  “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார்.!

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார்.!

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது #AV33 படத்திற்கும் அருண்விஜய் -ன் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப் பட்டார். படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநி யில் பரபரப்பாக நடந்து வருகிறது. சுமார் 45 நடிகர் நடிகைகள் மற்றும் 100க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். #AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அவர் டைரக்டர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார். எனக்காக நீண்ட…
Read More
படத்தை ரிலீஸ் செய்வதில் டென்ஷன்! – ‘ சங்கதலைவன்’ தயாரிப்பாளர் வெற்றிமாறன் பேச்சு!

படத்தை ரிலீஸ் செய்வதில் டென்ஷன்! – ‘ சங்கதலைவன்’ தயாரிப்பாளர் வெற்றிமாறன் பேச்சு!

'தறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. சமுத்திரகனி , கருணாஸ் , ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறை படைப்பாளி. இருவரும் சிறு வயது முதல் நண்பர்களும்கூட. இப்படத்தினை உதய் புரடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது . நடிகர் கருணாஸ் பேசியது, வாய்ப்பளித்த மணிமாறன் அவர்களுக்கு நன்றி. இப்படியான படத்தை தயாரித்த வெற்றிக்கும் நன்றி. அசுரனில் என் மகனுக்கு வெற்றிமாறன் மூலமாக எப்படி ஒரு பெயர் கிடைத்ததோ..அதேபோல் எனக்கு இந்தப்படம் மூலமாக ஒரு வாய்ப்பை வெற்றிமாறன் தயாரிப்பில் கொடுத்திருக்கிறார். நாவல் எழுதிய பாரதிநாதன் சாருக்கும் நன்றி. பொல்லாதவன் படத்தில் இருந்தே வெற்றிமாறனைப் பார்த்து வருகிறேன். அதேபோல் வெற்றிமாறனும் மணிமாறனும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.…
Read More
’ஏலே’ படத்தை பொருத்தவரை நான் தனியாக பணியாற்றிய படம் அல்ல -ஹலிதா சமீம்!

’ஏலே’ படத்தை பொருத்தவரை நான் தனியாக பணியாற்றிய படம் அல்ல -ஹலிதா சமீம்!

ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Reliance Entertainment) நிறுவனங்கள் இணைந்து வழங்க, எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள படம் ‘ஏலே’. இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி, தங்களது வால்வாட்ச்சர் பிலிம்ஸ் (Wallwatcher Films) சார்பில் முதல் படைப்பாக இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடக்‌ஷன் பணியை மேற்கொண்டுள்ளனர். ‘பூவரசன் பீப்பி’, ‘சில்லுக் கருப்பட்டி’ ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா சமீம் இயக்கியிருக்கும் இப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கேபர் வாசுகி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, “பள்ளி மாணவியாக இயக்குநர் ஹலிதாவை 15 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். இன்று இவ்வளவு பெரிய இயக்குநராக வளர்ந்து நிற்கிறார். ’ஏலே’ தான் அவருடைய முதல் கதை. இந்த கதையை 8…
Read More