நடிகர் சந்தானம் நிஜமாகவே ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார்! – ஆர்யா ஹேப்பி

நடிகர் சந்தானம் நிஜமாகவே ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார்! – ஆர்யா ஹேப்பி

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். விழாவில் விவேக் பேசிய போது, “ இங்கே சிம்பு மற்றும் சந்தானம் ரசிகர்கள் நிறைய பேர் வந்துள்ளனர்.அவர்கள் சிம்பு, சந்தானம் பெயரை சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால்,யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு. சினிமா எடுப்பதை போல் ரிலீஸ் செய்வதும் கஷ்டமாக உள்ளது. படம் வெளியாகும் சமயத்தில் தலைப்பு பிரச்சினை வருகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை மணப்பெண் ரெடியாக இருந்தாலும், மண்டபம் கிடைப்பதில்லை.அதுபோல், படம் ரெடியாகிவிட்டாலும் தியேட்டர் கிடைப்ப தில்லை.கிடைத்தாலும் நல்ல காட்சிகள் கிடைப்பதில்லை. அடை மழை…
Read More
சக்க போடு போடு ராஜா – டிரைலர்!

சக்க போடு போடு ராஜா – டிரைலர்!

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் சனிக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ளனர்.இந்தப் படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் ஜி. எல். சேதுராமன் இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா என்பவர் நடித்துள்ளார். முதல் முறையாக நகைச்சுவை நடிகர் விவேக், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் விடிவி கணேஷ், சம்பத் ராஜ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.  படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளாரக அறிமுகமாகிறார். இதையடுத்து படத்தின் இசை வெளியீடும் வரும் நவம்பர் 14-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.இதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். காமெடி நடிகராக கோலிவுட்டில் அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்த வகையில், 'சக்க போடு போடு ராஜா' டிரெய்லரில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.…
Read More
சந்தானம் நடிக்கும்  “சக்க போடு போடு ராஜா ” – ஆடியோ ரிலீஸ் எப்போ?

சந்தானம் நடிக்கும் “சக்க போடு போடு ராஜா ” – ஆடியோ ரிலீஸ் எப்போ?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி இருக்கிறார் நடிகர் சந்தானம். இதே சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் தற்போது `சக்க போடு போடு ராஜா', `ஓடி ஓடி உழைக்கனும்', `மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் `சக்க போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். .மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் .கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில் படமாக்கபட்டது. அதிலும் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.   "கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும்…
Read More