‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 ‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

  இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 'தங்கலான்' படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌ படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'தங்கலான்' திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை... பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த காணொளி குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், '' தங்கலான் திரைப்படம் உண்மை சம்பவங்களை…
Read More
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் !!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் !!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்…
Read More
இன்று சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமாக இருக்கிறது! ‘ரெபல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் !

இன்று சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமாக இருக்கிறது! ‘ரெபல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் !

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபல்'. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்., இயக்குநர் நிகேஷ் பேசியதாவது... நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான், ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷீட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன்…
Read More
ஜே பேபி அழகான ஃபேமிலி டிராமா

ஜே பேபி அழகான ஃபேமிலி டிராமா

இயக்கம்: சுரேஷ் மாரி நடிகர்கள்: ஊர்வசி, தினேஷ், மாறன் இசை: டோனி பிரிட்டோ பொதுவாக பா ரஞ்சித், நீலம் ப்ரொடக்சன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் படங்கள், சாதிய ஒடுக்கு முறைகளை ஏற்றத்தாழ்வுகளை பேசும் என்கிற கருத்து வலுவாக இருக்கிறது. இதுவரையிலும் அப்படி ஆன படங்கள் அந்நிறுவனத்திலிருந்து வந்துள்ளது என்பதே உண்மை. அதிலிருந்து மாறுபட்டு ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை, ஒரு அம்மாவின் கதையை, மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஜே பேபி. பேபி ஆக வரும் ஊர்வசிக்கு ஐந்து பிள்ளைகள். ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஊர்வசி முதிர்ந்த வயதில், ஒவ்வொரு பிள்ளைகளின் வீடுகளில் மாறி மாறி வசித்து வருகிறார். வயதான காரணத்தால் அவருக்கு மறதி பிரச்சினை வந்து வந்து போகிறது. ஒரு கட்டத்தில் அவர் வழிதவறி வெஸ்ட் பெங்கால் சென்று விடுகிறார். போலீஸ் மூலமே இந்த தகவல் அண்ணன் தம்பிகளுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே சண்டை போட்டு பிரிந்திருக்கும் அண்ணன்…
Read More
கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது ! ‘J.பேபி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு!

கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது ! ‘J.பேபி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு!

  இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’ ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ் மாரி, படத்தின் நாயகன் தினேஷ், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள மாறன், நடிகை சபீதா ராய், நடிகை இஸ்மத் பானு, நடிகை மெலடி, வசனகர்த்தா தமிழ் பிரபா, படத்தின் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், காஸ்ட்யூம் டிஸைனர் ஏகன் ஏகாம்பரம், கலை இயக்குநர் ராமு தங்கராஜ்,…
Read More
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பு- செல்வா RK. கலை- ரகு, சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம். உடைகள் - சபீர் நிழல்படம் - Rs ராஜா PRO- குணா.
Read More
குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ !!

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ !!

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி' . மகளிர் தினத்தில் வெளியாகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. 'ஜெ பேபி ' படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர். குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. 'ஜெ பேபி' படத்தை…
Read More
விளையாட்டில் மோதிக் கொண்ட புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர்1

விளையாட்டில் மோதிக் கொண்ட புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர்1

  இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும், நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஒரே நேரத்தில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடுவது தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இரண்டு படங்களும் வெற்றியடைய படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். நிகழ்வில் பா. இரஞ்சித், ஆர் ஜே பாலாஜி, அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் செல்வா, மற்றும் இரண்டு படங்களின் குழுவினரும் கலந்துகொண்டனர்.
Read More
திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிசயம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என்று பலரும் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்தனர். சென்னையில் சமீப காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு ருசிகர நிகழ்வாக மேடையில் விழா அமைப்பாளர்களான Noise and Grains நிறுவனம் மற்றும் விளம்பரதாரர்கள், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை பரிசளித்தனர், அதை அவர் அவருடைய ரசிகர் ஒருவருக்கு மேடையிலேயே…
Read More
மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன விக்ரம்!

மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன விக்ரம்!

விக்ரம் நடிப்பில் கோலார் தங்க வயலில் தொடங்கப்பட்ட தங்கலான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள evp ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த தங்கலான் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் சியான் விக்ரம். இப்படம் கேஜிஎப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் விக்ரமின் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, விலா எலும்பும் முறிந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் நலம் தேறியுள்ள…
Read More