‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

  இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நாயகி துஷாரா பேசியதாவது... 'நட்சத்திரம் நகர்கிறது' நான் மிகவும் நேசித்து நடித்த படம், மாரியம்மாவாக எனக்கு லைஃப் தந்தவர் ரஞ்சித் சார். ரெனே மூலம் அது தொடருமென நம்புகிறேன். இந்தப்படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படம் பாருங்கள். நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது.. என்னாலயே இத நம்ப முடியல. விஸ்காம் படிக்கும் போது மெட்ராஸ் படம்…
Read More
பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

  பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனுபாக்யராஜ், ப்ரித்விபாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அரக்கோணம் சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று முதல் படப்பிடிப்பை துங்குகிறார்கள். திரைக்கதை வசனம், - தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்.. இயக்கம் - ஜெய்குமார். தயாரிப்பு- லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி, நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித். கலை…
Read More
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

  'சீயான் 61' பட தொடக்க விழா சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர்…
Read More
சேத்துமான் அப்படினா என்ன?

சேத்துமான் அப்படினா என்ன?

சேத்துமான் இயக்கம் : தமிழ் கதை : ‘வறுகறி’ - பெருமாள் முருகன் சிறுகதை இசை பிந்து மாலினி கேமரா - பிரதீப் காளிராஜ்   சேத்துமான் என தெரியப்படும் பன்றியை சமைத்து சாப்பிட சிலர் விருப்பபட அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது என்பது தான் கதை. உணவு அரசியலை பற்றி பேசிய முக்கியமான படங்களில் சேத்துமான் திரைப்படமும் ஒன்று. ஒரு பன்றி கறியை சாப்பிட எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது என்பதை காட்சிகள் மூலமாக விவரிக்க முயற்சி செய்துள்ளனர். அது பாராட்டுதலுக்கு உரியதே. பார்வையாளர்களும் பன்றி கறி மீதான அனுபவத்தை இந்த படம் மூலமாக தான் உணருவார்கள் என்னும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுயாதீன திரைப்பட உருவாக்குதல் முயற்சியில் இந்த சேத்துமான் உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன திரைப்படங்களின் வரவு என்பது ஒவ்வொரு மொழிகளிலும் தேவையான ஒன்று. அது தான் அந்த மொழி மக்களின் நுட்பமான வாழ்வியல் முறையை…
Read More
சேத்துமான் படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.

சேத்துமான் படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.

    நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.   இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது, தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel…
Read More
பா ரஞ்சித்தின் அடுத்த படம் ஒடிடியில்!

பா ரஞ்சித்தின் அடுத்த படம் ஒடிடியில்!

  இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள் தயாரித்துவருகிறார். பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை , உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதை "சேத்துமான்" எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க நீலம் புரொடக்சன்ஸ் முன்வந்தது. அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். இந்த படத்தில் பிந்து மாலினி இசயமைப்பாளராகவும், CS பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர் புனே சர்வதேசத் திரைப்பட விழா, கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருந்தது. தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பேசும் இப்படத்தில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர். பல்வேறு…
Read More
கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன. இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார் . இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ்படவிழாவில் வெளியிடப்பட்டது ,இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித்,தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி…
Read More
குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான் - ’குதிரைவால்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் பிரதீப் குமாரின்…
Read More
காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் நெளிவு வளைவு தெரிந்து தன் பணிக்காலத்தை ஓட்டும் ரைட்டர், பொய் வழக்கில் மாட்டிகொண்ட இளைஞனை காப்பாற்ற முயல்வதே கதை. அதிகார வலைக்குள் சிக்கி தவிக்கும் எளியவர்களின் குரல் என்ற கதையமைப்பின் படி அமைக்கபட்ட திரைக்கதை தான் ரைட்டர். ஆழமான கதையையும், ஆச்சர்யப்படுத்தும் கிளைக்கதைகளையும் புகுத்தி உருவாக்கபட்ட திரைக்கதையாக இருந்தாலும், கதையுடன் ஒத்துப்போறதா என்றால், அது கேள்விகுறி தான். ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யங்களையும், சுவாராஷ்யங்களையும் புகுத்த வேண்டும் என்று மெனகெட்ட இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. ஆனால் எல்லா காட்சிகளும் தனிதனியாக சுவாரஷ்யம் நிறைந்ததாக இருந்தாலும், ஒன்றாக ஒரு முழு படத்திற்கான உணர்வை கடத்தவில்லை. காவல்துறையின் கருப்பு பக்கங்களையும், காவலாளிக்களுக்கே காவல்துறை செய்யும் கொடுமைகளையையும் வெளிகொணர முயற்சித்த இயக்குனர், பாராட்டுதலை பெறக்கூடியவர். சமுத்திரகனி ரைட்டர் கதாபாத்திரத்தில், தன் நடிப்பு திறமையை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் அதில் புழங்கும் போலீஸ் நடைமுறைகளின் வழக்கங்கள் என அனைத்தும் நுண்ணிய விவரங்களோடு பதிவு செய்திருப்பது…
Read More
தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல்,  மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பா .ரஞ்சித் பேசியவை , தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர்…
Read More