கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன. இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார் . இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ்படவிழாவில் வெளியிடப்பட்டது ,இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித்,தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி…
Read More
குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான் - ’குதிரைவால்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் பிரதீப் குமாரின்…
Read More
காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் கருப்பு பக்கம் – ரைட்டர்

காவல்துறையின் நெளிவு வளைவு தெரிந்து தன் பணிக்காலத்தை ஓட்டும் ரைட்டர், பொய் வழக்கில் மாட்டிகொண்ட இளைஞனை காப்பாற்ற முயல்வதே கதை. அதிகார வலைக்குள் சிக்கி தவிக்கும் எளியவர்களின் குரல் என்ற கதையமைப்பின் படி அமைக்கபட்ட திரைக்கதை தான் ரைட்டர். ஆழமான கதையையும், ஆச்சர்யப்படுத்தும் கிளைக்கதைகளையும் புகுத்தி உருவாக்கபட்ட திரைக்கதையாக இருந்தாலும், கதையுடன் ஒத்துப்போறதா என்றால், அது கேள்விகுறி தான். ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யங்களையும், சுவாராஷ்யங்களையும் புகுத்த வேண்டும் என்று மெனகெட்ட இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. ஆனால் எல்லா காட்சிகளும் தனிதனியாக சுவாரஷ்யம் நிறைந்ததாக இருந்தாலும், ஒன்றாக ஒரு முழு படத்திற்கான உணர்வை கடத்தவில்லை. காவல்துறையின் கருப்பு பக்கங்களையும், காவலாளிக்களுக்கே காவல்துறை செய்யும் கொடுமைகளையையும் வெளிகொணர முயற்சித்த இயக்குனர், பாராட்டுதலை பெறக்கூடியவர். சமுத்திரகனி ரைட்டர் கதாபாத்திரத்தில், தன் நடிப்பு திறமையை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் அதில் புழங்கும் போலீஸ் நடைமுறைகளின் வழக்கங்கள் என அனைத்தும் நுண்ணிய விவரங்களோடு பதிவு செய்திருப்பது…
Read More
தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை “ரைட்டர்” – பா.இரஞ்சித்! 

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல்,  மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பா .ரஞ்சித் பேசியவை , தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர்…
Read More
பா ரஞ்சித்-ன் நீலம் புரொடக்ஷன் சார்பில் அடுத்த படம்

பா ரஞ்சித்-ன் நீலம் புரொடக்ஷன் சார்பில் அடுத்த படம்

பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குனராக கபாலி காலா போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம். சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினையை மையமாகக்கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமார் அவர்களின் மகன் பலூன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பலூன் பிக்சர்ஸ் T.N அருண்பாலாஜி இணைந்து தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள். நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் , சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுத்தந்தது .அந்த வகையில் முழுக்க நகைச்சுவையையும்,உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இந்த…
Read More
சார்பட்டா பரம்பரை – விமர்சனம்!

சார்பட்டா பரம்பரை – விமர்சனம்!

மெட்ராஸாக இருந்து சென்னையாக ,மா(ற்)றிய வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையாவிடம் நம் கட்டிங் கண்ணையா முன்பொரு முறை பேசிக் கொண்டிருந்த போது“உண்மையில், சென்னை நகரம் தொடங்கிய இடம் வடக்கு மெட்ராஸ்தான். அரசியலையும் கலாச்சாரத்தையும் பொறுத்தவரை வடக்கு மெட்ராஸ் என்பது மிகவும் துடிப்பான பகுதி. அதே வட சென்னையில்தான் உலகிலேயே அதிகமான ஜீவ சமாதி இருக்கும் இடம் என்பது தெரியுமா? ஆம்.விஞ்ஞானத்தையும் மெய் ஞானத்தையும் நன்கு உணர்ந்த சித்தர்கள் பலர், வட சென்னையில் தான் ஜீவ சமாதி அடைந்து உள்ளனர்” என்று சொல்லி இருந்தார். இப்படியாப்பட்ட வட சென்னையில்தான் ப்ரொஃபஷனல் பாக்ஸிங் என்றொரு கலாச்சாரம் மிகப் பிரபலமாக இருந்தது. அது போன்ற தொழில்ரீதியான குத்துச்சண்டை கற்றுக் கொடுத்து ஆக்ரோசமான போட்டிகளை நடத்துவதற்கென்றே சில அமைப்புகள் இருந்தன. இவற்றைதான் பரம்பரைகள் என்று வட சென்னைவாசிகள் சொல்வது வழக்கம். இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபுபாய் பரம்பரை’ போன்றவை ப்ரொஃபஷனல் பாக்ஸிங் என்றவுடன் உடனே நினைவுக்கு…
Read More
ஆர்யா நடிப்பில் பா இரஞ்சித் இயக்கி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ நியூஸ்!!

ஆர்யா நடிப்பில் பா இரஞ்சித் இயக்கி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ நியூஸ்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டும ல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்தி ருக்கிறார்கள். கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை யமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங்…
Read More