அது என் போட்டோவே இல்ல கதறும் நடிகை மாளவிகா மோகனன் !

அது என் போட்டோவே இல்ல கதறும் நடிகை மாளவிகா மோகனன் !

மாளவிகா மோகனன் தான் தற்போதைய தென்னிந்திய சினிமாவின் சென்ஸேஷன் நடிகை. பேட்ட, மாஸ்டர் என பிரபல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இணையத்தில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் கிளாமரில் இவரை அடித்து கொள்ள ஆள் கிடையாது என்று தான் சொல்லும். அவ்வப்போது போட்டோஷூட் செய்து வெளியிட்டு வரும் அவர் எல்லை மீறிய கவர்ச்சியை தான் காட்டி வாரார் என புகார் சொல்லக் கொள்ளுமளவிற்கு போட்டோஷூட்களில் கவர்ச்சி காண்பிச்சு வருகிறார். இது ஒருபுறம் அவருக்கு ரசிகர்களை அதிகரித்தாலும், மறுபுறம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. மாளவிகா மோகனனின் புகைப்படங்களை பலர் போட்டோஷாப் செய்து பரப்பி வருகின்றனர். மாளவிகா மோகனன் கவர்ச்சி காண்பிப்பதில் தாராள மனம் கொண்டவர் ஆயிற்றே என அந்தப் போலி புகைப்படங்களையும் பலர் நம்பி பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தன் புகைப்படம் ஒன்று போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருவதையும்,…
Read More
விஜய் நடித்த  மாஸ்டர் ; அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்.29ல் வெளியாகிறது!

விஜய் நடித்த மாஸ்டர் ; அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்.29ல் வெளியாகிறது!

சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம். மும்பை, இந்தியா, 27 ஜனவரி 2021 - அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேக மான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்து உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள…
Read More
மாஸ்டர் – விமர்சனம்!

மாஸ்டர் – விமர்சனம்!

மூன்று நாள்களில் “மாஸ்டர்” உலகெங்கிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக செய்தி. கொரோனா பொதுமுடக்கத்தால் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையரங்குகளில் உச்ச வரிசை நாயகரான விஜய் படம் வெளியாகியிருக்கிறது. பொதுமுடக்க காலத்தின் இழப்புகளாலும் தொடரும் மனஅழுத்தங்களினாலும் “மாஸ்டர்” வந்தால் திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்ற உளவியல்ரீதியான முன்முடிவில் இருந்த மக்கள் படையெடுத்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைவிட, படத்தை திரையரங்கில் பார்க்கிறோம் என்பதே இன்றைய நிலையில் “பெரிய என்டர்டெயின்மென்ட்” ஆக மாறியிருக்கிறது. கூடவே பொங்கல் விடுமுறை, வணிகரீதியாக போட்டிப் படங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதில் வியப்பேதுமில்லை. திரையரங்குகள் வாயிலாக மீண்டும் தமிழ்த் திரைப்பட வர்த்தகம் பொதுமுடக்க காலத்துக்கு முந்தைய நிலையை எட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அது நிறைவேறியிருக்கிறதா? முன் கள திரை வர்த்தகர்களுக்குத்தான் தெரியும். சரி. படம் எப்படி இருக்கிறது? இது விஜய் படமா அல்லது விஜய் சேதுபதி படமா என்ற…
Read More
30 ஆண்டுகள் – 5 மொழிகள் அசராத ஸ்டண்ட்  மாஸ்டர் ஸ்டன் சிவா!

30 ஆண்டுகள் – 5 மொழிகள் அசராத ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா!

திரையுலகைப் பொறுத்தவரை உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துறை என்றால் ஸ்டண்ட் கலைஞர்கள் பணியாற்றும் துறைதான். அந்தத் துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய மொழி சினிமாக்களிலும் பணியாற்றி சாதனை செய்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா. இந்தியாவின் அனைத்து திரைப்பட பிரபலங்களுடனும் இவர் பணி புரிந்திருக்கிறார். இப்போது நடிகராகவும் பரிமளிக்க ஆரம்பித்துள்ளார். இந்த வருடம் ஆரம்பமே அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த பொங்கல் தினத்தன்று இவர் பங்களிப்பு செய்திருக்கும் 4 படங்கள் வெளியாகின்றன. முதலாவதாக, தெலுங்கில் இன்று ரிலீசான ‘கிராக்’ #krack படத்தில் ரவி தேஜாவுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இரண்டாவதாக சிம்புவின் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் திருநாளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக காத்திருக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் வில்லன் ரோலில் இவர்தான் கலக்கியிருக்கிறார். மூன்றாவதாக ஜெயம் ரவியின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘பூமி’ படத்தில்…
Read More