இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் !!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் !!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்…
Read More
இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை 'பெட்டிக்கடை', 'பகிரி' ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, 'மிக மிக அவசரம்' புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ' சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரையுலக‌ பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசியதாவது... இந்த விழாவில் நான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் என் அன்பு சகோதரர் சேரன் , அவர் நடித்த 'தமிழ்க்குடிமகன்' அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக 'தமிழ்க்குடிமகன்' இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த…
Read More
மாமன்னன் -என் பார்வை!

மாமன்னன் -என் பார்வை!

பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜின் உட்சம் மீண்டும் அதை அடைவது என்பது கடினம். மிக சுமாரான படம். பல நல்ல தருணங்களும் மிகச்சிறந்த மேக்கிங்கும், அட்டகாசமான இசையும் படத்தின் பலம். பலவீனமான கதை இரண்டாம் பாதியின் திரைக்கதை இந்தப்படத்தின் பெரும் பிரச்சனை. மாரி செல்வராஜுக்கு திரைமொழி மிக அழகாக வருகிறது. மிகப்பெரும் உணர்வுகளை மிக சில மாண்டேஜ் மூலமாக காட்டிவிடுகிறார். உதாரணம் உதயநிதி கீர்த்தி சுரேஷ் காதல் எபிஸோட் 4 நிமிட பாடல், மாண்டேஜ் மூலம் அது நம் மனதில் மிக ஆழமாக பதிகிறது. விடுதலை படத்தில் வெற்றி மிஸ் செய்தது இது தான்.ஆனால் அதே மாண்டேஜ் பிரச்சனையாகவும் இருக்கிறது மாமன்னன் யார் அவர் அவருடைய இனத்திற்கு என்ன செய்தார் எல்லாம் கரையிலேயே இல்லை வடிவேலுவை வைத்து வரும் மாண்டேஜ்கள் எதுவும் எடுபடவில்லை. 48 ஃப்ரேம் சில காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வை நாம் நெருக்கமாக உணர காட்டப்படும் திரை மொழி ஆனால்…
Read More
மாமன்னன் படத்தின் ரிலீஸ்  நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா! வசூல் பாதிக்குமா!

மாமன்னன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா! வசூல் பாதிக்குமா!

இது நாள் வரை சோசியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை மட்டுமே அடிக்கடி நடக்கும். இப்போது அவர்களை ஓரங்கட்டி விட்டு மாரி செல்வராஜ் vs கமல்ஹாசன் ரசிகர்கள் சண்டை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர்மகன் படத்தின் கிளைமேக்ஸில் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா போங்க என கமல் கத்தியை பிடுங்கிய நிலையில், கர்ணன் படத்தில் போலீஸ் தலையை வெட்டுங்க என மாரி செல்வராஜ் கத்தியை கையில் கொடுத்துள்ளார் என சோஷியல் மீடியாவில் மாரி செல்வராஜுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவி வருகின்றது அத்துடன் தேவர்மகன் படத்தையே மறந்து போன ஜெனரேஷனுக்கு மீண்டும் தேவர்மகன் படத்தை பார்க்கத் தூண்டிய மாரி செல்வராஜின் பேச்சுக்கு நன்றி என கமல் ரசிகர்கள் பலரும் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். மாரி செல்வராஜ் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசியது மாமன்னன் படத்தை ஒரு சாரார் பார்க்கவே முடியாதது போல…
Read More
“மாமன்னன்” படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

“மாமன்னன்” படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

  ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது ‘பரியேறும் பெருமாள்’

இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.இரஞ்சித் தயாரிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்டோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்திய சமூகத்தில் விஷமாகப் பரவி இருக்கும் சாதிய கொடுமைகளைக் கேள்விக்குட்படுத்தி சமத்துவத்தைப் பேசிய இப்படம் நல்ல விமர்சனங்களையும், மக்களிடையே நல்ல வரவேற்ப்பைபையும் பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹர் இப்படத்திற்கான ரீமேக் உரிமைத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலிவுட் நடிகர்களான சித்தார்த் சதுர்வேடியும், டிரிப்டி டிமிரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியில் ரீ-மேக்காகும் இப்படத்தில் முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதன் பின்னணியில் சாதிய முரண்பாடுகள் பற்றி பேசுவதாக இருக்கும்' என தெரிவித்திருக்கிறது.
Read More
பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக் சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார். இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள்…
Read More