மாமன்னன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா! வசூல் பாதிக்குமா!

இது நாள் வரை சோசியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை மட்டுமே அடிக்கடி நடக்கும். இப்போது அவர்களை ஓரங்கட்டி விட்டு மாரி செல்வராஜ் vs கமல்ஹாசன் ரசிகர்கள் சண்டை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவர்மகன் படத்தின் கிளைமேக்ஸில் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா போங்க என கமல் கத்தியை பிடுங்கிய நிலையில், கர்ணன் படத்தில் போலீஸ் தலையை வெட்டுங்க என மாரி செல்வராஜ் கத்தியை கையில் கொடுத்துள்ளார் என சோஷியல் மீடியாவில் மாரி செல்வராஜுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவி வருகின்றது

அத்துடன் தேவர்மகன் படத்தையே மறந்து போன ஜெனரேஷனுக்கு மீண்டும் தேவர்மகன் படத்தை பார்க்கத் தூண்டிய மாரி செல்வராஜின் பேச்சுக்கு நன்றி என கமல் ரசிகர்கள் பலரும் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். மாரி செல்வராஜ் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசியது மாமன்னன் படத்தை ஒரு சாரார் பார்க்கவே முடியாதது போல மாறி உள்ளதாகவும், சாதிய ரீதியிலான படங்களை எடுப்பவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.

Mari Selvaraj said straight to Kamal's face; Father-in-law is opposite to God's son! – Mari Selvaraj Maamannan Kamal Haasan Thevar Magan Mari Selvaraj old letter trending

இதனால், இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ள மாமன்னன் படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்களில் ஒட்டுமொத்த மக்களையும் தியேட்டருக்கு வர வைக்குமா? அல்லது எதிர்பார்த்த வெற்றியை பெறுமா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது. மேலும் இந்த மாமன்னன் படத்தை விமர்சிக்க கமல் ரசிகர்கள் தீவிரமாக தயாராகி உள்ளனர் என்றும் கூறி வருவதால் படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்குது