லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு

லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு

    ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய கல்வெட்டு ஆதாரங்களுடன் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலாக படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான தமிழர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அலாதியான பெருவிருப்பம் கொண்டு தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லைகா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் நோக்கத்தை துல்லியமாக அவதானித்த தமிழ்…
Read More
டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி – ஜூன் 22

டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி – ஜூன் 22

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. ‘மிருதன்’ படத்தில் ஜாம்பிகளின் கதையை சொன்ன சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தில் விண்வெளி கதையை கையிலெடுத்திருக்கிறார். ‘டிக் டிக் டிக்’ தான் இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவை நோக்கி வரும் ஒரு ஆபத்து, அதை தடுக்க, வேறு நாட்டு அரசு விண்வெளியில் பதுக்கி வைத்துள்ள அனுகுண்டு தேவைப்படுகின்றது. ஆனால், அதை எடுப்பது அவ்ளோ எளிது இல்லை, இதற்காக மேஜிக் கலையில் சிறந்து விளங்கும் ரவியை ஒரு டீமுடன் இந்திய அரசாங்கம் அனுப்பி வைக்கின்றது, இதை இந்த டீம் வெற்றிகரமாக செய்து முடித்ததா? என்பதுதான் இப்படத்தின் கதையாம் திரைப்பட உலகில் நடந்த தமிழ் சினிமா மறுசீரமைப்பு போராட்டத்திற்கு முன்னதாக இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் இப்படத்தின் ரிலீஸும் தள்ளிப்போனது. இப்போது ‘டிக் டிக் டிக்’கை ஜூன் 22-ஆம் தேதி…
Read More
ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் – கொஞ்சம் புது தகவல்கள்!

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் – கொஞ்சம் புது தகவல்கள்!

ஏ.எல்.விஜய்யின் ‘வனமகன்’ ரிலீஸாகி சக்ஸாக ஓடி வருகிறது. இதனிடையே யங் எனர்ஜெட்டிக் ஹீரோவான ஜெயம் ரவி கைவசம் சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ மற்றும் சுந்தர்.சி.யின் ‘சங்கமித்ரா’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதைக்களம் கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே அதிகம் பரிச்சயம் இல்லாத விண்வெளி சம்பந்தப்பட்டதாம். ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் குறித்து ரசிகர்கள் புது தகவல்கள் வராதா என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த புது டிக் டிக் டிக்-கில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒருநாள் கூத்து' பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் ஆரோன் அஜீஸ் நடிக்கிறார். மேலும், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடிக்கிறாராம். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்று கிறார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’…
Read More
சங்கமித்ரா-வில் இருந்து விலகியது ஏன்? – ஸ்ருதி தரப்பு விளக்கம்!

சங்கமித்ரா-வில் இருந்து விலகியது ஏன்? – ஸ்ருதி தரப்பு விளக்கம்!

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகிவருகிறது . இந்த படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்டோருடன் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. இதனிடையே இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சங்மித்ரா ஒரு பேரழகி. அவள் தன் ராஜ்ஜியத்தை காக்க போராடும் போது சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் தான் படத்தின் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், உறவுகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாகவும். திரைப்பட மகுடத்தில் சங்கமித்ரா ஒரு ரத்தினமாக ஜொலிக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.இது கற்பனை கதை என்றும். தொன்மையான தமிழ் மொழிக்கு இந்தப்படம் சமர்ப்பணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படமான 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர்…
Read More