ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் – கொஞ்சம் புது தகவல்கள்!

ஏ.எல்.விஜய்யின் ‘வனமகன்’ ரிலீஸாகி சக்ஸாக ஓடி வருகிறது. இதனிடையே யங் எனர்ஜெட்டிக் ஹீரோவான ஜெயம் ரவி கைவசம் சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ மற்றும் சுந்தர்.சி.யின் ‘சங்கமித்ரா’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதைக்களம் கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே அதிகம் பரிச்சயம் இல்லாத விண்வெளி சம்பந்தப்பட்டதாம். ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் குறித்து ரசிகர்கள் புது தகவல்கள் வராதா என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த புது டிக் டிக் டிக்-கில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒருநாள் கூத்து’ பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் ஆரோன் அஜீஸ் நடிக்கிறார். மேலும், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடிக்கிறாராம். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்று கிறார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

படம் குறித்து விசாரித்த போது, ‘ஒரு விஞ்ஞான கற்பனை கதை. விண்வெளி ஆய்வுக்காக ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரரான ஜெயம்ரவி, விண்வெளியில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. 90 சதவிகிதம் கிராபிக்ஸ் பயன்படுத்தப்படும் கதை. பெரும்பாலான படப்பிடிப்புகள் இதற்கென பூந்தமல்லியை அடுத்த ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் தனியாக உருவாக்கப்பட்டுள்ள கிரீன் மேட் ஸ்டூடியோவில் நடந்து வரும் ஷூட்டிங் விரைவில் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

இதனிடையே படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடந்து வருவதாகவும் லாஸ்ட் வீக் வெளியான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் கொடுத்த ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான திரை விருந்து தயாராகி வருகிறது; என்றும் டிக் டிக் டிக் டீம் தெரிவித்துள்ளது