24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!!

24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!!

  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது. டாக்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோ, கௌரி ஷிண்டே, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அனில் நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கி இயக்கத்தில்,  சன்னி தியோல், துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட், சரண்யா பொன்வண்ணன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ-5-ல் இந்த படம் கிடைக்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, ZEE5 இல் திரையிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த திரைப்படம் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது. குரு தத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும், சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் திரைப்படம் திரைப்பட விமர்சகர்களைக்…
Read More
‘ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் சல்மான், காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பு பாடல்

‘ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் சல்மான், காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பு பாடல்

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் சல்மான், காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பு பாடல் எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் பாடலான ‘தோழி’ மிகவும் அழகாக உருவாகியுள்ளது. மதன் கார்க்கியின் மந்திர வரிகளில், கோவிந்த் வசந்தாவின் ஆத்மார்த்தமான இசையமைப்பில், பிரதீப் குமாரின் இனிமையான குரலுடன் உருவாகியுள்ள இந்த பாடல் மெல்லிசை மற்றும் உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக உள்ளது. பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறுகையில், “ஹே சினாமிகா படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால்,…
Read More
துல்கர் சல்மானுக்கு கொரோனா !

துல்கர் சல்மானுக்கு கொரோனா !

கொரோனா இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது இதில் இப்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மான். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவு: "சற்று முன்னர் தான் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தனிமையில் உள்ளேன். காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் உள்ளது. மற்றபடி நான் நலமாக இருக்கிறேன். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு மேலும் அறிகுறிகள் தெரிந்தால் சோதனை செய்து கொள்ளுங்கள். இந்த பெருந்தொற்று காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்"
Read More
குருப் – திரை விமர்சனம் !

குருப் – திரை விமர்சனம் !

இயக்கம் - ஶ்ரீநாத் ராஜேந்திரன் திரைக்கதை மற்றும் வசனம்-  டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் நடிகர்கள் - துல்கர் சக்மான் டொவினோ தாமஸ், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம்சாக்கோ. கதை  -  1970 - 80 களில் கேரளாவில் மிகப்பெரிதாக பேசப்பட்ட இன்சூரன்ஸ் பணத்திற்காக நிகழ்த்தப்பட்டகொலை பின்னணியில் இருந்த குரூப் கதை தான் படம் (more…)
Read More
உண்மைக்கதை என்பதால் நிறைய பிரச்சனைகள் வருமென்பது தெரியும் – துல்கர் சல்மான்!

உண்மைக்கதை என்பதால் நிறைய பிரச்சனைகள் வருமென்பது தெரியும் – துல்கர் சல்மான்!

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி “குரூப்” - இன் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குரூப்”. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “குரூப்” படம் குறித்து துல்கர் சல்மான் கூறியதாவது.. இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்து தான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார். எப்படியாவது இந்தப்படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் இவ்வளவு…
Read More
துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்”  முதல் பார்வை

துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்” முதல் பார்வை

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், அவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவது இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் தனிச்சிறப்பாகும். அதன் தொடர்ச்சியாக,  அவரது அடுத்த திரைப்படமான ஹனு-மான் இந்தியத் திரையில் புதுமையான முயற்சியாக இருக்கும். முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக  சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். ஏற்கனவே கூறியபடி, முதல் பார்வை போஸ்டரையும் அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் காணொலியையும் படத்தின் குழு வெளியிட்டுள்ளது. நடிகர்…
Read More
“‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்! .

“‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்! .

ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ , கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாயகன் துல்கர் சல்மான், “இப்போது இதுவரைக்கும் நீங்கள் பார்த்தது வெறும் டீசர் தான். படம் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும். உலகத்தின் பல பகுதிகளில் ஒரே நாளில் வெளியாகும் என் முதல் படம். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படத்தை எடுத்தது சாதாரண விஷயம் கிடையாது. ஒரே காட்சியை திரும்ப திரும்ப இரு மொழிகளிலும் எடுத்தது சவாலாக இருந்தது. தமிழ்,…
Read More
‘சோலோ’ படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும்!

‘சோலோ’ படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும்!

  துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படம் ‘சோலோ’. இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கி உள்ளார். இந்த படத்த்தில் துல்கர் சல்மானுடன் நேகா ஷர்மா, பார்த்திபன், சதீஷ், நாசர், ஆர்த்தி வெங்கடேஷ், சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படம் 4 வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘சோலோ’ படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதாவது  நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நான்கு விதமாக உருவாகியுள்ள இதில், ருத்ரா, சிவன், சேகர் மற்றும் த்ரிலோக் ஆகிய நான்கு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துல்கர். இரண்டு பாத்திரங்கள் காதலை மையப்படுத்தியும், இரண்டு கோபத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. நெருப்பை மையமாகக் கொண்ட ருத்ரா கேரக்டரில் நேஹா ஷர்மா, நிலத்தை மையமாகக் கொண்ட சிவா கேரக்டரில் ஸ்ருதி ஹரிஹரன், நீரை மையமாகக்…
Read More
ட்ரெண்ட் மியூசிக் – பேரைக் கேட்டாலே அதிருதில்லே!

ட்ரெண்ட் மியூசிக் – பேரைக் கேட்டாலே அதிருதில்லே!

கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களை தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ் மற்றும் மலையாள இசை உரிமையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை ஈர்த்த அருமையான டீசரை தொடர்ந்து படத்தின் நாயகன் துல்கரின் ருத்ரா கதாபாத்திரத்தை சுற்றிய 4 பாடல்களை வெளியிட்டது படக்குழு. பீட்சா, டேவிட், சைத்தான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பிஜாய் நம்பியார் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படமாக இந்த சோலோ படத்தை கொடுக்கும் வேளைகளில் தீவிரமாக இருக்கிறா. துல்கர் சல்மானின் சமீபத்திய ஓகே கண்மணி, பெங்களூர் டேஸ் பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடக்க விஷயம். தொடர்ந்து தரமான படங்களின் உரிமையை கைப்பற்றுவதில் நாங்கள் பெருமையடைகிறோம், சோலோ அதற்கு சாட்சியாக இருக்கும் என்பது உறுதி. சோலோ நிச்சயம் ரசிகர்களின் ட்ரெண்டு மற்றும் எப்படி இசையமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒரு இசை ஆல்பத்தின் ஆயுளை…
Read More