‘சோலோ’ படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும்!

 

துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படம் ‘சோலோ’. இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கி உள்ளார். இந்த படத்த்தில் துல்கர் சல்மானுடன் நேகா ஷர்மா, பார்த்திபன், சதீஷ், நாசர், ஆர்த்தி வெங்கடேஷ், சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படம் 4 வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘சோலோ’ படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது  நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நான்கு விதமாக உருவாகியுள்ள இதில், ருத்ரா, சிவன், சேகர் மற்றும் த்ரிலோக் ஆகிய நான்கு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துல்கர். இரண்டு பாத்திரங்கள் காதலை மையப்படுத்தியும், இரண்டு கோபத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. நெருப்பை மையமாகக் கொண்ட ருத்ரா கேரக்டரில் நேஹா ஷர்மா, நிலத்தை மையமாகக் கொண்ட சிவா கேரக்டரில் ஸ்ருதி ஹரிஹரன், நீரை மையமாகக் கொண்ட சேகர் கேரக்டரில் தன்ஷிகா ஆகியோர் துல்கருக்கு ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள்.

3 ஒளிப்பதிவாளர்களும் 11 இசையமைப்பாளர்களும் பணிபுரியும் இப்படத்தை ‘ரெஃபிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து பிஜாய் நம்பியார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘GETAWAY ஃபிலிம்ஸ்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

சேகர் கேரக்டர் டீசர் வெளிவந்ததையடுத்து தன்ஷிகாவுக்கும் துல்கருக்குமான மெலடி பாடல் ஒன்று வெளியாகி 1 லட்சம் பார்வையாளர்களால் கவரப்பட்டுள்ளது

உயிராகி பாடல் வரிகள்  வீடியோ