ட்ரெண்ட் மியூசிக் – பேரைக் கேட்டாலே அதிருதில்லே!

கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களை தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ் மற்றும் மலையாள இசை உரிமையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை ஈர்த்த அருமையான டீசரை தொடர்ந்து படத்தின் நாயகன் துல்கரின் ருத்ரா கதாபாத்திரத்தை சுற்றிய 4 பாடல்களை வெளியிட்டது படக்குழு. பீட்சா, டேவிட், சைத்தான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பிஜாய் நம்பியார் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படமாக இந்த சோலோ படத்தை கொடுக்கும் வேளைகளில் தீவிரமாக இருக்கிறா. துல்கர் சல்மானின் சமீபத்திய ஓகே கண்மணி, பெங்களூர் டேஸ் பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடக்க விஷயம்.

தொடர்ந்து தரமான படங்களின் உரிமையை கைப்பற்றுவதில் நாங்கள் பெருமையடைகிறோம், சோலோ அதற்கு சாட்சியாக இருக்கும் என்பது உறுதி. சோலோ நிச்சயம் ரசிகர்களின் ட்ரெண்டு மற்றும் எப்படி இசையமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒரு இசை ஆல்பத்தின் ஆயுளை அணுக வேண்டும் என்பதற்கான அதிர்வலையை உண்டாக்கும். திரையுலகம் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு இல்லையென்றால் இது நிச்சயம் எங்களால் சாத்தியம் ஆகியிருக்காது, இந்த ஆதரவால் நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்வோம் என்றார் ட்ரெண்ட் மியூசிக் சிஇஓ சிதம்பரம் நடேசன்.

ரோஷோமான் பாடல் வேகமான மற்றும் ஒரு உற்சாகமான பாடல், அது தான் டீசரின் பின்னணியிக் இடம் பெற்ற இசை. பிஜாய் நம்பியாரின் முந்தைய படமான டேவிட்டில் இசையமைத்த பிரஷாந்த் பிள்ளை தான் இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். ஃபில்டர் காஃபி, மசாலா காஃபி போன்ற மியூசிக் பேண்ட்ஸை பிஜாய் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாரம்பரிய மற்றும் சமகால இசையில் அமைந்துள்ள மற்ற பாடல்களுக்கு இசையமைத்துள்ள சூரஜ் குரூப்புடன் இணைந்து சிறந்த இசையை வழங்கியிருக்கிறார்கள் இந்த பேண்ட் குழுக்கள்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் தனித்துவம் மிக்கவை. துல்கரின் ருத்ரா கேரக்டரை அடுத்த கட்டத்துக்கு தூக்கி செல்ல 11 இசையமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார். இந்த படத்தில் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு என நான்கு முக்கிய ஆதாரங்களை சுற்றி நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் துல்கர். கொச்சியில் துல்கரின் ரசிகர்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தும் வேலைகளில் இருக்கிறது படக்குழு. செப்டம்பரில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

ட்ரெண்ட் மியூசிக்கை பற்றி:

டிரெண்ட்லௌட் நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் டிரெண்ட் மியூசிக். ட்ரெண்ட்லௌட் கிரியேட்டர், பிராண்ட், பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை டிஜிட்டல் யுகத்தில் இணைக்கும் ஒரு வினையூக்கி. உங்கள் கற்பனையை யூடியூப், ஃபேஸ்புக் தாண்டி கொண்டு செல்ல உதவுவது தான் டிரெண்ட்லௌட் நோக்கம். 25 ஆண்டு மீடியாவில் கொடி கட்டி பறந்து வரும் விஷன் டைம் இந்தியா நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு தான் ட்ரெண்ட்லௌட். 2015ல் துவங்கப்பட்டு தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ட்ரெண்ட்லௌட், தங்கள் நெட்வொர்க்கின் கீழ் 100க்கும் மேற்பட்ட சேனல்களையும், அரை மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது.

எங்களது பலமே காமெடி, இசை, டிராமா மற்றும் வெப் சீரீஸ் என எல்லா விதமான கண்டெண்ட் தான். எங்களின் மெட்ராஸ் மீட்டர், பாரசிட்டமால் பணியாரம், ஸ்மைல் சேட்டை ஒட்டுமொத்தமாக 8 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இந்த சேனல்கள் உள்ளூர் ரசிகர்களை கவரும் விதத்திலும், சீரான விதத்தில் கண்டெண்ட் கொடுத்து மிகவும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த சேனல்களின் கண்டெண்ட்டுக்கு மூளையாக செயல்படுபவர்களும் மிகவும் சௌகரியமாக பலவித பிராண்டுகளுடன் இணைந்து செயல்பட்டு, தேசிய அளவிலான பிரச்சார கொள்கைகளை தங்கள் ரசிகர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறார்கள்.

ட்ரெண்ட் மியூசிக் யுவன் ஷங்கர் ராஜவின் கடம்பன், தர்மதுரை, ஹிப் ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு மற்றும் சண்டி வீரன் படங்களின் இசை உரிமையையும் வைத்திருக்கிறது. மேலும் இசைஞானி இளையராஜாவின் ஒட்டு மொத்த டிஜிட்டல் தொகுப்புக்கான பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது.

படங்களை மார்க்கெட் செய்வது எங்களின் வேலை. எ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மணிரத்னம் இருவரையும் வைத்து காற்று வெளியிடை படத்துக்கு ஃபேஸ்புக் லைவ் நடத்தினோம். சமீபத்திய நிபுணன் மற்றும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் உட்பட 15 படங்களின் புரமோஷன் பணிகளிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சென்னை 28 பார்ட் 2 படத்துக்கு ஃபேஸ்புக் பிரேம் செய்தது மட்டுமின்றி ஹைதராபாத் ஃபேஸ்புக் தலைமையகத்தில் இருந்து லைவ் செய்து புரமோஷன் செய்த முதல் தமிழ் படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறோம். ட்ரெண்ட்லௌட் உடன் இணைந்து ஹாட்ஸ்டார் தயாரித்த வெப் சீரீஸ் “As i am suffering from Kadhal” சமகால காதலின் வகைகளை விளக்கியது.

தலை முதல் கால் வரை உன்னிப்பாக எல்லா பிளாட்ஃபார்மிலும் நாங்கள் பிரமோஷன் செய்து வருகிறோம். தற்போது இரண்டு தெலுங்கு, ஒரு தமிழ் தொடர் மற்றும் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் தொடர்களை விளம்பரப்படுத்தும் பணிகளில் இருக்கிறோம். அர்கடியோ, ஏசர் ஹெல்த்கேர், வெங்கட் பிரவுவின் பிளாக் டிக்கட், சுந்தர் சியின் ஆவ்னி மூவீஸ் மற்றும் கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியாவை நிர்வகித்து வருகிறோம். அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, திவ்யதர்ஷினி, குஷ்பூ மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய முக்கிய பிரபலங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களை நிர்வகித்தும் வருகிறோம்.