விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் ! ஐந்து மொழிகளில் வெளியாகிறது!

விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் ! ஐந்து மொழிகளில் வெளியாகிறது!

  விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும்…
Read More
‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி & தனஞ்ஜெயன்!

‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி & தனஞ்ஜெயன்!

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர் புதிய முயற்சி தான் ‘ஸ்கிரிப்டிக்’. பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர், மற்றும் 'டூப்பாடூ' போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தவர் என பன்முக வித்தகராக திகழும் மதன் கார்க்கி மற்றும் பிரபல தயாரிப்பாளர்-விநியோகஸ்தர், பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, “ஸ்கிரிப்டிக்” (SCRIPTick) என்ற பெயரில் ஓர் திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளனர். “ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி மற்றும் www.scriptick.in என்ற அதன் இணையதளத்தை மூத்த திரைப்பட இயக்குநர், ‘இயக்குநர் இமயம்’ திரு பாரதிராஜா அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். திறமையான எழுத்தாளர்களிடமிருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, முழுமையாக உருவாக்கப்பட்ட, நேர்த்தியான திரைக்கதைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களுக்கு வழங்க…
Read More
கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு !

கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு !

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க ,ஒளிப்பதிவினை N S உதயகுமார் மேற்கொள்கிறார் . இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றி கூறியது : கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மீகா கூறியது : இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த…
Read More
ரசிக்கும்படியான படம் ‘கபடதாரி’ – விமர்சனம்!

ரசிக்கும்படியான படம் ‘கபடதாரி’ – விமர்சனம்!

ஹைடெக்-காகிப் போன இந்த 21`ஆம் நூற்றாண்டில் கண்ணில் படும் எழுத்துக்களை எல்லாம் சொல்லாக கூறி விடும் டெக்னாலஜி எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் கூட பொழுதுப் போக்கு சாதனமான சினிமாக்களுக்கு கதை பிடிப்பதும் அதை சுவைபட வடிவமைக்கும் திரைக் கதையாக்குவதிலும் பலருக்கு கொஞ்சம் கூட  ஆர்வமில்லை. அதனால்தானோ என்னவோ நம் கோலிவுட்டில் பலரும் தங்கள் பட டைட்டில் தொடங்கி கதை வசனம் உள்ளிட்ட எதற்கும் மெனக்கெடாமல் விட்டேத்தியாக முன்னொரு கால ஹிட் தலைப்பு தொடங்கி எதையோ வழங்கி  இதுதான் சினிமா என்ற பெயரில் காட்சிப்படுத்தி நமக்கான காலத்தைக் கபளிகரம் செய்வார்கள்.. இந்த உபாதையில்  சிக்கித் தவிக்கும் கோடம்பாக்க ரசிகனை திருப்திப்படுத்த வென்றே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக யோசித்து பலரும் ரசிக்கும்படி ‘கபடதாரி’ என்றொரு படத்தை வழங்கி இருக்கிறார்கள். கன்னடத்தில் ரிலீஸாகி ஹிட் அடித்த ‘கவலுதாரி’என்ற க்ரைம் த்ரில்லர் கதையைத்தான் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதாவது துப்பறியும் போலீசாக வாழ ஆசைப்படும் சிபிராஜ் ட்ராபிக்…
Read More
காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27  ரிலீஸ்!

காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27 ரிலீஸ்!

ஆர்.டி.எம் இயக்கியுள்ள 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் வெளியகி இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றினார். கூடவே, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வெற்றி மாறன். இதையடுத்து, 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. இந்த கொரோனா & ஊரடங்கால் தள்ளி போன நிலையில் நவம்பர் 27-ம்…
Read More
கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி நடிப்பில் தயாரான மௌனராகம் படம் இன்றளவும் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும் பொழுதும் பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று சொல்வது மிகையல்ல . காரணம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை. அதிலும் கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமெளலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஒற்றை வார்த்தையையே தற்போது தயாராகப் போகும் ஒரு தமிழ்ச் சினிமாவின் தலைப்பாகவே வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்த நேமை உச்சரித்த அதே நாயகன் கார்த்திக்கை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது இன்னும் சிறப்பான விஷயம். இதில் அடிசினல் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் இதில் ஸ்பெஷல் ரோல் என்பதுதான் . ஆம்.. வளந்து ஓயெது விட்ட நடிகர்…
Read More