காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27 ரிலீஸ்!

ஆர்.டி.எம் இயக்கியுள்ள ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் வெளியகி இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றினார். கூடவே, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வெற்றி மாறன். இதையடுத்து, ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது.

இந்த கொரோனா & ஊரடங்கால் தள்ளி போன நிலையில் நவம்பர் 27-ம் தேதி ‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.