அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி வலம் வருகிறார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி ஷங்கருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைச்சுது. அதேவேகத்தில் மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிச்சார் அதிதி ஷங்கர். இந்தப் படம் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மாவீரன் படத்தில் அதிதி கமிட்டான போதே இளம் நடிகைகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதால், அதிதி எளிதாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகிவிடுவதாக சொல்லப்பட்டுச்சு. தற்போது அமலா பால் நடிக்க வேண்டிய படத்திலும் அதிதி கமிட்டாகவுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால் - இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் முதன்முறையாக உருவான 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. இதனையடுத்து இக்கூட்டணியில் வெளியான 'ராட்சசன்' ஹாரர் ப்ளஸ் சைக்கோ…
Read More
தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் தனுஷ் அவரின்  50-ஆவது படத்தை, அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்படாத தகவல் ஒன்று உள்ளது. இந்த படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், தனுஷின் D-50 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷை தவிர விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.துஷாரா விஜயன் தனுஷுக்கு தங்கையாகவும், அபர்ணா பாலமுரளி சந்தீப் கிசனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் அமலா பாலும் இணைந்துள்ளதாக, கூறப்படும் தகவல் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. ஒரு தரப்பினர் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளதாக கூறும்…
Read More
துபாய் அரசின் கோல்டன் விசாவை பெற்றார் நடிகை அமலா பால்

துபாய் அரசின் கோல்டன் விசாவை பெற்றார் நடிகை அமலா பால்

2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட கதலு' படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான 'கடாவர்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், மனம் மயக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. இந்த புத்தாண்டு அவருக்கு ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை தந்துள்ளது, மேலும் ஒரு பெரும் புத்தாண்டு பரிசாக துபாய் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில்…
Read More
துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கியது !

துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கியது !

  2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட கதலு' படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான 'கடாவர்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், மனம் மயக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. இந்த புத்தாண்டு அவருக்கு ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை தந்துள்ளது, மேலும் ஒரு பெரும் புத்தாண்டு பரிசாக துபாய் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய்…
Read More
அமலா பால் தயாரித்து நடிக்கும் “கடாவர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அமலா பால் தயாரித்து நடிக்கும் “கடாவர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மிகப்பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கதைகளை ஒரு புகைப்படம் சொல்லிவிடும்’ அது சினிமாவுக்கு அப்படியே பொருந்தும். அதிலும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பது ரசிகர்களை படத்தின்பால் ஈர்க்கும் மிக முக்கிய கருவி ஆகும். ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் முதல் அம்சமாக அமைவதால், ஒரு படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எனும் நிகழ்வு, மிக முக்கியமானதாகிவிடுகிறது. அந்த வகையில் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டும் வகையில், தயாரிப்பாளர், நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள “கடாவர்” படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளன்று  (26.10.2021) வெளியாகியுள்ளது. “கடாவர்” படம் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே, ரசிகர்களின் பேரார்வர்த்தை தூண்டி வருகிறது. இப்படம் இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் (ஃபோரன்ஸிக் சர்ஜன்) விசாரணை அதிகாரியாக அழைத்து வரப்படும் கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. வித்தியாசமான இவ்வேடத்திற் காக, நடிகை அமலா பால்…
Read More
`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் வெள்ளி வெளியீடு!

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் வெள்ளி வெளியீடு!

கோலிவுட்டின் அழகு வில்லன் அலைஸ் நாயகன் அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கும்…
Read More
அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

பிரபல நடிகை அமலா பால் போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் தனது பென்ஸ் காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி சென்னை டிரான்ஸ் கார் நிறுவனத்தில் இருந்து ஏ கிளாஸ் வகை பென்ஸ் காரை ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.இந்த காரை புதுச்சேரி முகவரி ஒன்றை கொடுத்து அந்த மாநிலத்தில் இருந்து பதிவு எண் பெற்று நடிகை அமலா பால் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி முகவரி என்று நடிகை அமலா பால் கொடுத்தது போலி முகவரி என்று தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் அமலா பால் கொடுத்த முகவரியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர் தனக்கும் அமலா பாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வரி…
Read More
பாஸ்கர் ஒரு ராஸ்கல்:  ஷூட்டிங் ஓவர்!

பாஸ்கர் ஒரு ராஸ்கல்: ஷூட்டிங் ஓவர்!

தமிழில் பிஸியாக நடித்து வரும் அமலா பால், அரவிந்த் சாமியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி விரைவில் இதன் டீசர் வெளிவருமென அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 24) தெரிவித்துள்ளார். நயன்தாரா-மம்மூட்டி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் பாஸ்கர் தி ராஸ்கல். இப்படத்திற்கான வரவேற்பையும், அங்கீகாரத்தையும் கணக்கில் கொண்டு மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். முக்கிய வேடத்தில் நிகேஷா பட்டேலும், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடித்துள்ளனர். அரவிந்த் சாமி இடம்பெற்றுள்ள டீசர் அறிவிப்புக்கான…
Read More
கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . '' மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணி யின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் '' என தயாரிப்பு தரப்பு கூறுகின்றனர் . 1980களில் நிஜமாகவே வாழ்ந்த…
Read More