`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் வெள்ளி வெளியீடு!

0
296
கோலிவுட்டின் அழகு வில்லன் அலைஸ் நாயகன் அரவிந்த் சாமி – அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார்.
அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஹர்ஷினி மூவிஸ் தயாரித்துள்ளது. விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் `பக்கா’ படமும் இதேநாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.