விஜய் யேசுதாஸுக்காக தனுஷ் பாடினார்!

விஜய் யேசுதாஸுக்காக தனுஷ் பாடினார்!

மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் படம் ‘படை வீரன்’. இந்த படத்தில் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்க, அம்ரிதா ஐயர் கதாநாயகி யாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய பாத்திரம் ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க, இயக்குனர்கள் மனோஜ் குமார், கவிதாபாரதி மற்றும் நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசஃப், கன்யா பாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள். தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த தனுஷ் படத்தை பாராட்டியிருப்பதுடன் இந்த படத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று கூறி, ‘லோக்கல் சர்க்கா… ஃபாரின் சர்க்கா…’ என்று துவங்கும் பாடலை கார்த்திக் ராஜா இசையில் பாடியுள்ளார். ஒரு பின்னணிப் பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பாடல் பாடுவது இதுதான் முதல் முறை என்கின்றனர் இப்படக்குழுவினர்.…
Read More
வெட்டி ஆபீசர்களை வி. ஐ. பி. – 2 ஆக்கிய தனுஷ் & கோ!

வெட்டி ஆபீசர்களை வி. ஐ. பி. – 2 ஆக்கிய தனுஷ் & கோ!

முன்னொரு காலத்தில் வெட்டி ஆபீசர் என்ற கிண்டலுக்கு ஆளான அததனை யூத்களுக்கு விமோசன்ம வந்து மூன்று வருடமாகிறது, ஆம. வேலையில்லா இளைஞர்கள் இப்போது தங்களை விஐபி என்று கம்பீரமாக சொல்லிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பொதுவாக ஒரு திரைப்படம் மக்களுக்கு பிடிப்பதற்கும், அது ஒரு மாற்றதை தருவதற்குமான வித்தியாசங்கள் எக்கச்சக்கம் உள்ளன. படு கேஷூவலாக லோ பட்ஜெட்டில் தனுஷை தவிர மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாமல் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி மக்கள் மனதில் இடம்பிடிக்கவும், ஒரு தரப்பின் அடையாளமாகவுமே மாறிப்போனதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு !! அதன் மிகப் பெரிய வெற்றிக்கு முதல் காரணம் அதன் திரைக்கதை, வேலையில்லா பட்டதாரி படத்தின் கதை மிகவும் எளிமையான ஒன்று, ஒரு வகையில் அதுவே அதை மக்களிடம் சென்று சேர மிகப்பெரிய கருவியாக இருந்திருக்கிறது எனறுதான் சொல்ல வேண்டும். மூன்று வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு ஹவுஸில் இருக்கும் வேலையில்லாத மிடில் கிளாஸ் இளைஞன், அவன்…
Read More
தனுஷ் நடிச்சு வந்த ஹாலிவுட் பட ஷூட்டிங் ஓவர்!

தனுஷ் நடிச்சு வந்த ஹாலிவுட் பட ஷூட்டிங் ஓவர்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பெல்ஜியம், பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தனது முதல் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். "படப்பிடிப்பு முடிந்தது. ஃபகீரின் பயணம் முடிகிறது. அற்புதமாகத்தான் இருந்தது. என் மொத்த குழுவுக்கும் அன்பும், நன்றிகளும். கண்டிப்பாக உங்களை நினைவில் வைத்திருப்பேன். அடுத்த நிறுத்தம், வீடு !" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ். பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன்…
Read More
ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகி றார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களும் உண்டுதான் . ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள். ஆனால்'இந்த மாதிரி பொண்டாட்டியெல்லாம் படத்துல மட்டுந்தான் சார் கிடைப்பாங்க' என்று ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் அதையும் விட்டுவைக்கவில்லை 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம். ரகுவரனின் சட்டையைப்பிடித்து அவரது மனைவி ஷாலினி குடிக்கலல்ல அப்பறம் என்ன ஊது என சொல்வது, பலருக்கும் கல்யாண வீடியோவை…
Read More
வேலை இல்லா பட்டதாரி 2- ல் என்ன ஸ்பெஷல்?

வேலை இல்லா பட்டதாரி 2- ல் என்ன ஸ்பெஷல்?

ரகு, ரகு என சரண்யா பொன்வண்ணன் அழைத்துக்கொண்டிருந்த வரை, நமக்கே ரகுவரன் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை. ‘என் முழுப் பேரு ரகுவரன்’ என தனுஷ் வில்லத்தனம் காட்டியதுதான் திருப்புமுனை. ரகுவரனுக்கு அப்பா என்றால் பயம். அம்மா மீது பாசம். தம்பி என்றால் அன்பு கலந்த வெறுப்பு என வி.ஐ.பி படத்தில் பார்த்துவிட்டு, வி.ஐ.பி-2 படத்தில் என்ன செய்திருப்பார்களோ என்ற பயம் ஏற்பட்டபோது, அதை சுக்குநூறாக உடைத்தது வி.ஐ.பி 2 டீசர். டீசரில் சமுத்திரக்கனிக்கு எதிரியே இல்லைன்னா வாழ்க்கையே போருடா என்ற வசனம் கொடுத்திருப்பார்கள். அதுதான் ரகுவரனின் தாரக மந்திரம். தனக்கு சமமான எதிரியை வைத்துக்கொண்டு வீழ்த்துவதைவிட, தன்னைவிட பல மடங்கு உயரத்தில் இருக்கும் எதிரியை அதற்கும் மேலே சென்று அடித்து வீழ்த்துவதுதான் வீரத்தின் அடையாளம். ஆனால், வி.ஐ.பி 2 படத்தில் அது வில்லனுக்கு(ரகுவரனுக்கு) அடையாளம். ரகுவரனின் எதிரியாக வரும் வசுந்தராவின் கேரக்டரை உச்சத்தில் வைத்ததிலேயே, ரகுவரனின் அடுத்த பாய்ச்சல் எத்தனைப் பெரியதாக இருக்கப்போகிறதென தெரிந்துகொள்ளலாம் . ஆனால்,…
Read More
விஐபி 2 படத்தில் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை! – கஜோல் பேட்டி

விஐபி 2 படத்தில் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை! – கஜோல் பேட்டி

தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்‌ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை கஜோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதன் சாராம்சம்:- “தமிழில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். இந்த படம் 1997-ம் ஆண்டு வெளியானது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்துள்ளேன். தமிழ் மொழியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழி தான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர். நான் தயங்கிய நேரத்தில், ‘இந்த கதாபாத்திரம் உங்களுக்குத்தான் நன்றாக அமையும். நீங்கள் நடியுங்கள்,…
Read More
வி.ஐ.பி. 2 மட்டுமில்லே மூணு, நாலு கூட வரும்! – தனுஷ் நம்பிக்கை

வி.ஐ.பி. 2 மட்டுமில்லே மூணு, நாலு கூட வரும்! – தனுஷ் நம்பிக்கை

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்ற மாதம் 25 ஆம் தேதி மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் படத்தின் டிரெய்லர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் தனுஷ், கஜோல், சமுத்திரகனியுடன் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் பரந்தாமன் உள்ளிட்ட பலரும்…
Read More
தனுஷ் இயக்கத்தில் உருவான ‘பவர் பாண்டி’ பட டிரெய்லர்!

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘பவர் பாண்டி’ பட டிரெய்லர்!

ஹீரோ,புரொடீயூசர்,பாடலாசிரியர், சிங்கர் என்று திரையுலகில் அடுத்தடுத்து அவதாரங்கள் எடுத்து வரும் தனுஷின் முதல் இயக்குனர் அவதார, பவர் பாண்டி. ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள பவர் பாண்டி என பெயரில் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் தனுஷ் முதன் முதலாக இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது ப.பாண்டி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியாகி உள்ளது. https://www.youtube.com/watch?v=xe_wc5dIlFU தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் ஸ்டண்ட்மேன் ஒருவரைப் பற்றிய கதையாகும். இக்கதையில் ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனது கதாபாத்திரம் சுமார் 30 நிமிடங்கள் வருவது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறதாம்.
Read More