வி.ஐ.பி. 2 மட்டுமில்லே மூணு, நாலு கூட வரும்! – தனுஷ் நம்பிக்கை

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்ற மாதம் 25 ஆம் தேதி மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் படத்தின் டிரெய்லர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் தனுஷ், கஜோல், சமுத்திரகனியுடன் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் பரந்தாமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தனுஷ், “வி.ஐ.பி-1 மற்றும் வி.ஐ.பி-2 பாகம் என இரண்டுமே ஒரு கதா நாயகனையோ, கதா நாயகியோ மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அல்ல, தாய் பாசத்தை அடிப்படையாக கொண்ட படம். `வேலையில்லா பட்டதாரி-2′ ஒரு ஆணாதிக்க படம் இல்லை. `வேலையில்லா பட்டதாரி’ முதல் பாகத்தை போலவே ரசிக்கும்படி இருக்கும். இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெரும். முதல் பாகத்தில் அம்மாவை இழந்த மகன், அவனது வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறான் என்பதை படமாக்கியிருந்தோம். வேலையை இழந்து தவிக்கும் திருமணமான இளைஞன் படும் கஷடங்கள், முயற்சிகள் குறித்து இந்த பாகம் உருவாகி இருக்கிறது. கஜோலின் கதாபாத்திரம் படத்தின் அச்சாணியாக இருக்கிறது. அவரை தவிர்த்து வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள். `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாவது பாகமும் வரும், அந்த பாகத்திலும் கஜோல் நடிப்பார்” என்றும் தனுஷ் கூறினார். மேலும் வி.ஐ.பி படம் இரண்டாம் பாகத்துடன் முடிவடைந்து விடாது மேலும் 3, 4 ஆம் பாகம் என தொடரும்” என்றும் தெரிவித்தார். அத்துடன் பவர்பாண்டி போன்ற உணர்பூர்வமான படங்களிலும் கவனம் செலுத்தும் தனுஷ் பவர்பாண்டி படத்தின் 2-ஆம் பாகத்தை எதிரிபார்க்கலாம் என்று கூறினா .

இந்நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய தனுஷ், முதல் பாகத்தில் ஒரு இளைஞ னுக்கு தேவையான துடிப்பு, உறுதி வேண்டும். எனவே அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம்.ஆனால் இரண்டாவது பாகத்திற்கு பொறுமையும், வாழ்க்கைக்கு உண்டான தத்துவத்தை உணர்ந்த ஒரு இசையமைப்பாளர் வேண்டும் என்பதால் ஷான் ரோல்டனை தேர்ந்தெடுத்தேன். இப்படத்தில் அவரது இசை அருமையாக வந்திருக்கிறது என்றார். அதே போல் ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு சமீர் தாஹிர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்தோம் என்றார். படத்தொ குப்பாளர் பிரசன்னா எனக்கு மாரி, பவர்பாண்டி போன்ற படங்களில் மிகச்சிறப்பான பணியை செய்து கொடுத்தார். அவரின் படத்தொகுப்பில் டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  வி.ஐ.பி-2 படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி, எனது பிறந்த நாளன்று வெளியாவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது”, என்றும் அவர் கூறினார்.

படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், “தனுஷ் எனக்கு ஒரு நல்ல மெண்ட்டார், எனக்கு சீனியர். அவருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். வி.ஐ.பி படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தனுஷ் மற்றும் கஜோல் மேடத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறினார்.

நாயகி கஜோல் பேசும் போது, “இருபது வருடம் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறேன், வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. இன்றைய சினிமா வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே புது புது விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும். இன்றைய சினிமா ஒரு குறிப்பிட்ட மொழி ரசிகர்களை மட்டுமே சென்றடைவதில்லை. எனவே தரமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவிலும் நடிப்பேன்”. என்றார்.

நடிகர் சமுத்திரகனி, “தம்பி தனுஷூடன் இணைந்து நான் நடித்த வி.ஐ.பி முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் மிகச்சிறப்பாக உருவாகி யுள்ளது. இப்படத்திலும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்று குறிப்பிட்டார். மேலும் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் அனுபவம் பற்றி பேசிய அவர், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் அவருடன் இணைந்து நடித்த முதல் அந்த ஒரு காட்சியிலேயே நான் பிறவி பலனை அடைந்ததாக உணர்கிறேன்.” என்றார்.