வெட்டி ஆபீசர்களை வி. ஐ. பி. – 2 ஆக்கிய தனுஷ் & கோ!

0
465

முன்னொரு காலத்தில் வெட்டி ஆபீசர் என்ற கிண்டலுக்கு ஆளான அததனை யூத்களுக்கு விமோசன்ம வந்து மூன்று வருடமாகிறது, ஆம. வேலையில்லா இளைஞர்கள் இப்போது தங்களை விஐபி என்று கம்பீரமாக சொல்லிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பொதுவாக ஒரு திரைப்படம் மக்களுக்கு பிடிப்பதற்கும், அது ஒரு மாற்றதை தருவதற்குமான வித்தியாசங்கள் எக்கச்சக்கம் உள்ளன. படு கேஷூவலாக லோ பட்ஜெட்டில் தனுஷை தவிர மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாமல் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி மக்கள் மனதில் இடம்பிடிக்கவும், ஒரு தரப்பின் அடையாளமாகவுமே மாறிப்போனதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு !!

அதன் மிகப் பெரிய வெற்றிக்கு முதல் காரணம் அதன் திரைக்கதை, வேலையில்லா பட்டதாரி படத்தின் கதை மிகவும் எளிமையான ஒன்று, ஒரு வகையில் அதுவே அதை மக்களிடம் சென்று சேர மிகப்பெரிய கருவியாக இருந்திருக்கிறது எனறுதான் சொல்ல வேண்டும். மூன்று வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு ஹவுஸில் இருக்கும் வேலையில்லாத மிடில் கிளாஸ் இளைஞன், அவன் சிறிய வீடு, அதில் அவன் படும் அல்லல்கள், அவன் சுயமரியாதையை தூண்டும் சின்ன சின்ன சீண்டல்கள் செய்யும் டென்ஷனான அப்பா, நன்றாக படித்து வேலைக்கு செல்லும் தம்பி, தன்னை தானே சுய பகடி செய்யும் வகையில் இருந்த காட்சியமைப்பு என அனைத்துமே எளிய மக்கள் அன்றாடம் கடந்து வரும் ஒன்றாக இருந்ததால் நாயகனின் இடத்தில் அவர்களால் நின்று பார்க்கவும், அவனின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவும் முடிகிறது…

அந்த படம் வெளியான காலகட்டமும் இதன் வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, புற்றீசல்களாகி இதற்கு மேல் கல்லூரிகள் திறக்க இடமில்லை என்று கூறும் அளவிற்கு கல்லூரிகளை கட்டி பொறியியல் வல்லுநர்களை மந்தைகள் போல உருவாக்கி அனுப்பும் நிலையில் மெத்த படித்த நம் மக்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளின் வேலையின்மையால் அதன் மேல் இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் வெளியானது வேலையில்லா பட்டதாரி -ஒன்று.

அதே சமயம் தான் படித்த துறைக்கான வேலை கிடைக்காமல் கிடைக்கும் ஏதோ ஒரு வேலையை செய்ய மனமில்லாமல் வேலை தேடி அலைந்த பலரின் வலியை மிகச்சிறப்பாக பிரதிபலித்தது விஐபி, உண்மையாகவே இதே பிரச்சனையால் குடும்பங்களை கவரும் வகையிலிருந்த கதைக்களம், வெள்ளந்தி தாயின் மனமும் வருடும் அல்லது நெருடும் பாசம், அவள் கண்ணாடி வழியாக உலகை காணும் இளைஞன், அப்படி தட்டு தடுமாறி ஒரு விடியலுக்காக போராடும் மிடில் க்ளாஸ் இளைஞனின் மீது தொடுக்கப்படும் தகுதியற்ற பணக்காரனின் திமிர், அதை மிடில் க்ளாஸ் எனும் திமிரை கொண்டே அடக்குதல் என ஒவ்வொன்றுமே எளிய மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் விஷயமாக இருந்ததால் ஒவ்வொரு பிரேமுமே மக்களுக்கு நெருக்கமாக விஐபி ஐ கொண்டு சென்றது …

அதிலும் நம்மில் ஒருவராக அதிலும் படித்து ஜெயிக்க ஆக்ரோஷம் காட்டும் இளைஞர் ரோலில் வந்த தனுஷின் இயல்பான தோற்றம் நடிப்பு, அனிருத்தின் இசை, கொஞ்சம் கூட நேர விரயமில்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதை, மேலும் தமிழ் நாட்டின் நிறத்தில் நாம் தினந்தோறும் பார்க்கும் பெண்களை போல இருந்த அமலா பாலின் நளினம் என எல்லா பிரேம்களிலும் பல்வேறு வயதிலிருக்கும் சகலத் தரப்பட்ட ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சியமைப்பிற்கு வித்திட்டது எளிமையான அதே சமயம் வலிமையான மசாலாவாக விஐபி வந்திருந்தது…1

அதையெல்லாம் விட படம் பார்த்த மக்கள் ரகுவரனை மற்றுமொரு கதாபாத்திரமாக காணாமல் தங்கள் பிரதிநிதியாக கொண்டாடியதே வேலையில்லா பட்டதாரியின் வெற்றி…அதனால்தான் வெளியான வருடத்தின் இரண்டாவது மிகப்பெரிய வசூலை குவித்து ப்ளாக்பஸ்டரானது விஐபி என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி ஃபார்முலாக்களை எல்லாம் தற்போது உணர்ந்து புரிந்து திட்டமிட்டு உருவாக்கிய வி ஐ பி 2 படமும் மெகா ஹிட் ஆக வாய்ப்பு அதிகமிருக்கிறது.!