என் பேரை மிஸ் யூஸ் பண்ணப் படாது! – அஜித் காட்டம்!

என் பேரை மிஸ் யூஸ் பண்ணப் படாது! – அஜித் காட்டம்!

இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் ‘விவேகம்’ நாயகன் அஜித் -தின் சட்ட ஆலோசகர் பரத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘25 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்து வரும் எனது கட்சிகாரர் அஜித்குமார், நேர்மையான முறையில் வரி செலுத்துபவர். சமூகத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவுபவர் மற்றும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்படும் ஒரு குடிமகன் ஆவார். எனது கட்சிக்காரர் எந்த அரசியல் இயக்கத்தையும் (பிராந்திய மற்றும் தேசிய கட்சிகள் உட்பட) சார்ந்தவர் இல்லை. தனது சுயசிந்தனைப்படி ஜனநாயக முறையில் வாக்களிப்பவர். தனது ஜனநாயக நம்பிக்கையையும், சிந்தனையையும் தனது ரசிகர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் அவர் எப்பொழுதும் திணித்ததும் இல்லை. எனது கட்சிக்காரர் எந்த வணிக சின்னத்தையும், பொருளையும், நிறுவனத்தையும், அமைப்பையும், சங்கத்தையும் சார்ந்து அதன் விளம்பர தூதராக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தற்போது செயல்படுவதில்லை. எனது கட்சிக்காரர் தனது வளர்ச்சிக்கு ஊக்க துணையாக இருந்த உண்மையான ரசிகர்கள், தன்னை பின்பற்றுபவர்கள், திரை பத்திரிகையாளர்கள்,…
Read More
அஜித்தையே கலாய்ச்சவன் நான் – பரோட்டா சூரி மகிழ்ச்சி!

அஜித்தையே கலாய்ச்சவன் நான் – பரோட்டா சூரி மகிழ்ச்சி!

சூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான் ’வெண்ணிலாக் கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். இதனால இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர். இந்த நிலையில் சினிமாவில் தான் அடியெடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டதையும் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இதுநாள் வரை இருந்துவரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சூரி பழைய நினைவுகளை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.. அப்போது. லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜி’ படத்தில் இரண்டு காட்சிகளில் தான் நடித்ததாகவும், அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நடித்த சூரி, படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜித்தை…
Read More
விவேகம் – ஆகஸ்ட்  24 ரிலீஸ்!

விவேகம் – ஆகஸ்ட் 24 ரிலீஸ்!

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜீத் நடித்துள்ள படம் விவேகம். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, சென்சாருக்கு விண்ணப்பித்தி ருந்தார்கள். இந்த சென்சார் முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. இதனிடையே ‘விவேகம்’ வெளியீட்டு தேதிக்காக பல்வேறு திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை இறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள். ஒரு வழியாக இன்று (ஜூலை 31) காலை தணிக்கை அதிகாரிகள் ‘விவேகம்’ படத்தைப் பார்த்து சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தற்போது ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இதர படங்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே ஆகஸ்ட் 2-ந்தேதி அஜீத் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 25…
Read More
’பெளத்தம் ஓ கே.. ஆனால் நோ கடவுள்’! –  அக்‌ஷராஹாசன் விளக்கம்!

’பெளத்தம் ஓ கே.. ஆனால் நோ கடவுள்’! – அக்‌ஷராஹாசன் விளக்கம்!

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'விவேகம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்‌ஷரா ஹாசன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக அவர் அளித்த பேட்டியில் கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு, "கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா மாதிரிதான். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன்” என்றார்.  மேலும் அவர், “என் அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அளவுக்கு நான் கடவுள் பற்றி யோசிப்பதில்லை. எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்விய லோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருகிறேன். அதனால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்'' என்றார். இதையடுத்து அக்‌ஷரா ஹாசன் பெளத்த மதத்தை தழுவி விட்டார் என்று செய்திகள் பரவின. உடனே கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹாய் அக்‌ஷு, நீ மதம் மாறிவிட்டாயா? நீ மாறியிருந்தா லும் எனக்கு உன்னைப் பிடிக்கும். அன்பு மதம்…
Read More
அஜித் சாருடன் பணி புரிந்தது அருமை! – அக்‌ஷராஹாசன் மகிழ்ச்சி!

அஜித் சாருடன் பணி புரிந்தது அருமை! – அக்‌ஷராஹாசன் மகிழ்ச்சி!

லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு 'விவேகம்' படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் 'விவேகம்' படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர், ''இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல பரிமாணங்கள் கொண்ட இந்த…
Read More
விஜய் பாணியில் அஜித்-சிலை ரெடியாகுது!

விஜய் பாணியில் அஜித்-சிலை ரெடியாகுது!

நம்ம கோலிவுட்டில் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாகக் எகிறிக்கொண்டே போகும் டாப் ஹீரோ அஜித். எந்த ஒரு நடிகருமே தங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்ததாக சரித்திரமில்லை, ஆனால் திடீரென்று "நான் எனது ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன். முதலில் குடும்பத்தை கவனியுங்கள்" என்று கூறிய பிறகு இவரின் ஃபேன்ஸ் கூட்டம் முன்னிலும் பல மடங்கு எகிறி விட்டதாம். இந்நிலையில் நம் தமிழின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டாடும்விதமாய் அவர்களின் ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மூலம் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போதும் பிறந்த நாளின் போதும் கட் அவுட், போஸ்டர், ரத்த தானம் என்று செய்து  வருகின்றனர். அதையும் தாண்டி ஒரு சிலருக்கு  ரசிகர்கள் சிலை வடித்து வரும் போக்கும் ஆரம்பித்து விட்டது. அந்த வகையில்  விஜய் ரசிகர்கள் விஜய்க்கு சிலை எடுத்திருந்தனர். இதையடுத்து தர்போது கும்பகோணத்தைச் சார்ந்த அஜித் ரசிகர்கள் அஜித்துக்கு சிலை எடுத்து வருகின்றனர். அஜித்-தின் ‘விவேகம்’ படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று…
Read More
மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்-தின் விவேகம்  டீசரில் என்ன ஸ்பெஷல்?

மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்-தின் விவேகம் டீசரில் என்ன ஸ்பெஷல்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியாவில் கலந்து கொண்டுள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்,  போன ஒரு மாத காலமாகவே அஜித் ரசிகர்கள் தூக்கத்தைத் தொலைத்து சுறுசுறுப்பாகியிருக்கிறார்கள்.  எல்லாம் வருகிற மே மாதம் 1 ம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால் வந்த உற்சாகம் தான் தான். ஒரு பக்கம் தல பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி விட வேண்டுமென்கிற முனைப்பு இருந்தாலும் அன்றைய தினம் அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகுமா என்று காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே ‘விவேகம்’ படத்தின் டீஸர் ம்22 1-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக…
Read More