வி3 என்ன சொல்ல வருது?

0
84

Team A Ventures தயாரிப்பில் அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள “வி3” படத்திற்கு ஆலன் செபாஸ்டியன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆடுகளம் நரேன் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பாவனா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பாவனாவுக்கு நீதி கேட்டு போராட்டம் வெடித்தது. இந்த வழக்குஅரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி 5 இளைஞர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட ஐந்து பேரின் உடலையும் அவர்கள் பெற்றோர் கேட்க, அதற்கு காவல்துறை மறுக்கிறது. பின்னர் இது பெரும் சர்ச்சையாக வெடிக்க, மனித உரிமை ஆணையம் இந்த வழக்கிற்குள் வருகிறது. மனித உரிமை அதிகாரியாக வரலக்ஷ்மி சரத்குமார் இந்த வழக்கை விசாரித்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

படத்தின் அனைத்து முடிச்சுகளும் எப்படி அவிழ்கிறது, அது என்ன என்ன அதிர்ச்சி சம்பவங்களை வெளிகொண்டு வருகிறது என்பதே இந்த படத்தின் கதை.

மனித உரிமை ஆணைய அதிகாரியாக வரும் வரலட்சுமி சரத்குமார் உடைய தோரனை பார்ப்பவரை ரசிக்க வைக்கிறது. அவரது விசாரணை பாணி மற்றும் வழக்கத்திற்கு மாறான நடிப்பு கதாபாத்திரத்தின் தரத்தை உயர்த்துகிறது. பாதிக்கப்பட்டவரை கலங்க வைக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து பின்னர் படிபடியாக வேகம் எடுக்கிறது. பாலியல் வன்கொடுமை, போலி என்கவுண்டர், அரசியல்வாதிகளின் அத்துமீறல் என பல சமூக அவலங்களை கையில் எடுத்து அழுத்தமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

May be an image of 1 person and text

பாதிக்கபட்ட பெண்ணாக நடித்த பாவனா நடிப்பில் தத்ரூபமாக கதாபாத்திரத்தை முன் நிறுத்துகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையாக நடித்திருக்கும் எஸ்தர் அனில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சமூகத்தைப் பற்றி கேட்கும் போது உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அப்பா வேடத்தில் வரும் ஆடுகளம் நரேன், மகளுக்கு ஏற்பட்ட கொடுமையை தாங்க முடியாமல், கதரும் ஒரு நடுத்தர குடும்பத்தின் அப்பாவாக பார்வையாளர்களை அழ வைக்கிறார்.

பாலியல் குற்றங்களை திரையில் காட்ட முயன்ற இந்த படக்குழு ஒரு நேர்மையான படத்தைகொடுத்துள்ளனர்