டிரைவர் ஜமுனா திரை விமர்சனம் !!

இயக்கம்கிங்ஸ்லின்

நடிகர்கள்ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சினி, மணிகண்டா, கவிதா பாரதி

ஒரு பெண் கால் டாக்ஸி ஓட்டுனர் கூலிக்கு கொலை செய்யும் ஆட்களிடம் ஒரு டிரிப்பில் மாட்டிக்கொள்கிறார். வேறொரு பக்கம் முன்னாள் எம் எல் ஏவை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. போலீஸ் அந்தகொலையாளிகளை பிடிக்க நினைக்கிறது இந்த கதைகள் எப்படி இணைகிறது.  இறுதியில் என்ன ஆனதுஎன்பதே படம்.

தந்தையை இழந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அவரின் கால் டாக்ஸி ஓட்டுநர் பணியை தன் கையில் எடுத்துக்கொள்கிறார். வீட்டை அடைமானம் வைத்துவிட்டு ஓடிய தம்பி, வியாதியால் அவதிப்படும் அம்மா எனப்போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் ஓட்டுநராக தன் தொழிலைச் செய்கிறார்

அரசியல்வாதியான ஆடுகளம் நரேனைக் கொலை செய்யக் கிளம்பும் ஒரு கூலிப்படை, ஐஸ்வர்யா ராஜேஷின்கால் டாக்சியில் ஏறுகின்றனர்.  அந்தக் கூலிப்படையைத் துரத்தி வரும் காவலர்களால் ஐஸ்வர்யா ராஜேஷ்என்னவானார், கூலிப்படையின் திட்டம் நிறைவேறியதா என்பதே படம் ..

ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் சாதாரண பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்எனும் இண்டர்னேஷனல் கரு ஆனால் அது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால் அங்கு தான் பிரச்சனை ஒருநல்ல கதை ஆனால் திரைக்கதை நம்மை கடுமையாக சோதிக்கிறது அதிலும் க்ளைமாக்ஸ் எல்லாம் அந்தகுழந்தையே நீங்க தான் மொமண்ட்

ஐஸ்வர்யா ராஜேஷ், வண்டி ஓட்டுநர் ஜமுனாவாக இப்படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துணை நடிகர்களான ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சினி, மணிகண்டா, கவிதா பாரதி ஆகியோரும் நன்றாகநடித்துள்ளனர்.

கோகுல் பெனாயின் அற்புதமான ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். ஆனால் ஜிப்ரானின் பின்னணி இசைபடத்திற்கு பரபரப்பு கூட்டுகிறது. ஆனாலும் திரில்லர் கதை நிறைய திரில் இருந்தாலும் கதை நம்மிடம்ஒட்டாததால் மொத்த படம் ஏனோ தானோவென்று நகர்கிறது.

திரைக்கதையில் இன்னும் கவனம் கூட்டியிருந்தால் ஒரு நல்ல திரில்லராக இருந்திருக்கும்.

டிரைவர் ஜமுனா ஏமாற்றம்.