பம்பர் லாட்டரி பரிசு அடித்ததா ?

பம்பர் திரை விமர்சனம்

இயக்கம் – செல்வகுமார்
நடிப்பு – வெற்றி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி.

ஊதாரி, ஒன்றுக்கும் ஆகாதவன் திருடன் என தூற்றப்படும் ஒருவனுக்கு பம்பர் லாட்டரி அடிக்கிறது. தான் கஷ்டத்தில் இருந்தாலும் அதை அவனை தேடி வந்து தருகிறான் நேர்மை மாறா கிழவன். பணம் வருகிறது என்றவுடம் அவனைச் சுற்றி இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் பணம் மனித மனங்களில் என்னவெல்லாம் செய்கிறது என்பதே இந்தப்படம்.

தொடர்ந்து திரில்லர் படங்களாக நடித்து நம்மை சோதித்த நாயகன் வெற்றி உண்மையில் நல்ல கதையில் எல்லோரும் தயங்கும் கதாப்பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு அசத்தியிருக்கிறார். அவருக்கு இது பேர் சொல்லும் வெற்றிப்படம்.

ஒரு சிம்பிளான வாழ்க்கை கதை அதற்கு தகுந்த பரபர திரைக்கதை என்ன நடக்கும் என்பது தெரிந்தே இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் ஈர்த்து விட்டார்கள்.

அங்கங்கே பட்ஜெட்டும் நடிகர்களின் ஓவர் நடிப்பும் கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் ஒரு முழுப்படைப்பாக நிறைவைத்தருகிறது.

ஊதாரி திருடனாக வெற்றி தயங்காமல் கதாப்பாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்துள்ளார். படத்தில் உண்மையாக கலக்குபவர் ஹரீஷ் பேரடி தான் மனிதர் நேர்மையின் சிகரமாக மனதை கொள்ளை கொண்டு விடுகிறார். ஷிவானி நாயகி ஜீபி முத்துவை விட அவருக்கு அதிக ஸ்கோப் இல்லை. ஜீபி முத்து கூடிய சீக்கிரம் தமிழ் சினிமா காமெடியனாகி விடுவார்.

Bumper Movie Review | Bumper Screen Review
பம்பர் லாட்டரி அடித்த பிறகு ஒவ்வொரு கேரக்டரும் மாறுவது தான் படத்தின் பலம் அதை திரைக்கதையில் அழகாக கோர்த்யிருக்கிறார் இயக்குநர் அனுபவம் வாய்ந்த இயக்கம் முதல் படத்தில் வாய்த்திருப்பது அழகு.

தூத்துக்குடி கேரளா என இரண்டு இடங்களில் நடக்கும் இரண்டு இடங்களும் கேமராவில் நன்றாக வந்திருக்கிறது. இசை படத்திற்கானதை தந்துள்ளது.

பணமா குணமா வாழ்வில் எது முக்கியம் என்பதற்கான பதில் தான் பம்பர் கண்டிப்பாக கண்டுகளிக்கலாம்.